fbpx
Connect with us

Cinemapettai

கார்னியர் விளம்பரத்தில் நடித்தது அருவருப்பாக உள்ளது! நடிகையின் சர்ச்சை பேட்டி

News | செய்திகள்

கார்னியர் விளம்பரத்தில் நடித்தது அருவருப்பாக உள்ளது! நடிகையின் சர்ச்சை பேட்டி

சினிமா ஹீரோயின்கள் அழகு சாதனப் பொருட்களின் விளம்பரத்தில் நடிப்பது என்பது பல ஆண்டுகளாய் நடந்துவருகிறது. ஸ்ரீதேவி, ஜெய பிரதா முதல் இந்த விளம்பர கலாசாரம் அப்போதிலிருந்தே மிகவும் Famous.

இந்நிலையில் தற்போது நடிகை பிரியங்கா சோப்ரா தான் முன்பு நடித்த ஒரு விளம்பரப்படத்தை எண்ணும்போதே அருவருப்பாக உள்ளதென்று பேட்டியளித்துள்ளார்.

அந்த விளம்பரம் முக கிரீம் நிறுவனமான கார்னியர்ருடையது. தற்போது ஹாலிவிட் சீரியல்கள் மற்றும் படங்களில் பிசியாக நடித்து வரும் பிரியங்கா சோப்ரா இது பற்றி கூறியது

“நிறத்தால் பெண்களை மட்டப்படுத்தும் இது போன்ற விளம்பரங்களில் அறியாமையின் காரணமாக நடித்துவிட்டேன்.

பெண்கள் மனதில் தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும் இந்த விளம்பரத்தில் நடித்ததற்கு நான் வெட்கப்படுகிறேன்.

இது எனக்கு புரிந்தவுடனேயே கார்னியர் நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்துவிட்டேன். இனி அப்படிப்பட்ட விளம்பரங்களில் எவ்வளவு சம்பளமாக இருந்தாலும் நடிக்க மாட்டேன்.

கருப்பு என்பது குறைபாடாக பார்க்கப்படுவதை நான் வெறுக்கிறேன், அழகும் மகிழ்ச்சியும் நிறத்தில் இல்லை என்பதை நான் முழுமையாக புரிந்து கொண்டேன்.” இவ்வாறு பேட்டியளித்துள்ளார்.

அவரது பேட்டிக்கு பெரும் வரவேற்பு கிடைத்துள்ள போதும் கார்னியர் நிறுவனம் இது குறித்து பிரியங்கா மீது கடும் கோபத்தில் உள்ளதாம்.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: கிளைமேக்ஸ்ஸில் திருந்தும் தமிழ் சினிமா வில்லன் போல் திடீரென்று திருந்திய பிரியங்காவிற்கு எங்கள் வாழ்த்துக்கள்.

 

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top