தனியார் சானல் ஒன்றில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. இதில் 15 பிரபலங்கள் கலந்துகொண்டனர். இதில் ஒரு போட்டியாளராக கலந்துகொண்ட கஞ்சா கருப்பு இருவாரங்களுக்கு முன் நிகழ்ச்சியிலிருந்து வெளியேறினார்.

இந்நிலையில் பிரபல FM சானல் ஒன்றின் நேர்காணலில் கலந்துகொண்டார். அதில் அவரிடம் நிகழ்ச்சி தொகுப்பாளர் பல கேள்விகளை கேட்டார். இதில் நாடோடிகள் படத்தில் பரணியுடன் நன்றாக தானே நடித்தீர்கள்.

பிக்பாஸ் படத்தில் மட்டும் ஏன் இப்படி. ஸ்க்ரிப்ட் நன்றாக இல்லையா. அதனால் தான் வெளியே வந்தீர்களா? ஸ்கிரிப்டில் அப்படி தான் நடிக்க சொல்லி இருந்ததா என கேட்டார்.

ஸ்கிரிப்ட் எல்லாம் சரியாக தான் இருந்தது. எல்லாருமே நடிப்பதில் கொஞ்சம் வீக்னஸ் தான் என்றார் கருப்பு. மேலும் எல்லாரும் நடிக்கிறீர்களா என கேட்க உடனே ஆமாம் என்றார் கருப்பு.

மேலும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் விளம்பரத்தில் 30 கேமிராக்கள் என சொல்லப்பட்டது. ஆனால் FM நேர்காணலில் 110 கேமிரா என்று கஞ்சா கருப்பு கூறீயுள்ளார்.