Connect with us
Cinemapettai

Cinemapettai

இன்று நடிகர் அல்வா வாசு காலமானார்! கண்ணீரில் திரையுலகம்..

ganja vasu

Tamil Cinema News | சினிமா செய்திகள்

இன்று நடிகர் அல்வா வாசு காலமானார்! கண்ணீரில் திரையுலகம்..

வாசுதேவன் என்னும் நகைச்சுவை நடிகர் அல்வா வாசுவை பல வடிவேலு நகைச்சுவைகளில் பார்த்திருப்போம். மணிவண்ணனிடம் துணை இயக்குனராக பணிபுரிந்து அவரது இயக்கத்தில் வெளிவந்த வாழ்க்கை சக்கரம் என்னும் திரைப்படத்தில் அறிமுகமானவர்தான் அல்வா வாசு.

அமைதிப்படை படத்தில் சத்யராஜிற்கு அல்வா சப்ளை செய்பவராக வருவார், அந்த படத்திற்கு பிறகு அல்வா வாசு என்று அழைக்கப்பட்டார்.

சுமார் முன்னுறு படங்களுக்கு மேல் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் இவர். அதிகமாக இவர் நடித்தது வடிவேலுவின் காமெடி குழுவில்தான்.

கல்லீரல் பாதிப்பினால் நேற்று சென்னையிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட இவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மிக மோசமான நிலையில் அனுமதிக்கப்பட்ட இவருக்கு ஒரு நாள் மட்டுமே மருத்துவர்கள் கெடு கொடுத்திருந்தனர். அதன்படி இன்று இவரது உயிர் பிரிந்ததாக செய்தி வந்தது.

வடிவேலுவும் வாசுவும் மிகவும் நெருங்கிய நட்பு கொண்டவர்கள். இவரது இறுதிச்சடங்கிற்கு வடிவேலு கட்டாயம் வருவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

சினிமா பேட்டை கமெண்ட்ஸ்: எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோக்கள் பார்க்க சினிமாபேட்டை Youtube-ல் Subscribe பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top