வெற்றிமாறனை சீண்டிய கஞ்சா கருப்பு.. இதெல்லாம் உனக்குத் தேவையா?

வெற்றிமாறன் தொடர்ந்து தமிழ் சினிமாவில் வித்தியாசமான கதைகளின் மூலம் வெற்றி படங்களை கொடுத்து வருகிறார். தனுஷின் அஸ்தான இயக்குனரான இவர் தற்போது சூரியை கதாநாயகனாக வைத்து விடுதலை படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இரண்டு பாகங்களாக உருவாகும் விடுதலை படத்தின் படப்பிடிப்பு தற்போது மும்மரமாக நடந்து வருகிறது. இதைத் தொடர்ந்து வெற்றிமாறன் சூர்யாவின் வாடிவாசல் படத்தை இயக்கவிருக்கிறார். இந்நிலையில் அண்மையில் சீமான் ராஜராஜ சோழனின் வரலாற்றை வெற்றிமாறன் படமாக எடுக்க உள்ளதாக கூறினார்.

Also Read :பிரபாகரனின் வாழ்க்கையை படமாக்கும் வெற்றிமாறன்.. தமிழினத்தின் தலைவனாக நடிக்க போகும் ஹீரோ!

சமீபத்தில் திருமாவளவனின் 60 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு ஒரு விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதில் பேசிய வெற்றிமாறன், நம்முடைய அடையாளங்களை தொடர்ந்து பறித்து கொண்டு வருகிறார்கள், வள்ளுவருக்கு காவி உடை கொடுப்பதாக இருக்கட்டும், ராஜராஜ சோழன் இந்துக்களின் அரசன் என்பதாக இருக்கட்டும், இப்படி தொடர்ந்து அடையாளங்களை எடுப்பது சினிமாவில் நடந்து வருவதாக கூறியிருந்தார்.

இதில் வெற்றிமாறன் பேச்சுக்கு ஆதரவு, எதிர்ப்பு என இரண்டும் தொடர்ந்து வருகிறது. இதைப் பற்றி காமெடி நடிகர் கஞ்சா கருப்பு பட விழாவில் பேசியிருந்தார். கஞ்சா கருப்பு டாப் நடிகர்களின் படங்களில் நகைச்சுவை கதாபாத்திரங்களில் நடித்து வந்தார்.

Also Read :தனுஷை துன்புறுத்திய வெற்றிமாறன்.. உண்மையை போட்டுடைத்த பிரபலம்

மேலும் நடிப்பை தாண்டி படத்தை தயாரிக்க ஆசைப்பட்ட ஒரு படத்தை தயாரித்து அதுவும் நஷ்டத்தை சந்தித்தார். இந்நிலையில் கஞ்சா கருப்பு ஒரு விழா மேடையில் பேசுகையில், சினிமாவில் புதிய இயக்குனர்கள் வந்தோமா, படத்தை எடுத்தோமா, சம்பாரிச்சமா, ரெண்டு வீடு வாங்கினோமா, போனோமான்னு இருக்கணும்.

தேவையில்லாம ராஜராஜ சோழன் இந்து என்றெல்லாம் பேசுறாங்க என்று மறைமுகமாக வெற்றிமாறனை தாக்கி கஞ்சா கருப்பு பேசியுள்ளார். இது தற்போது வெற்றிமாறன் ரசிகர்கள் மத்தியில் மிகுந்த சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் கஞ்சா கருப்புவை திட்டி விமர்சனம் செய்து பேசி வருகிறார்கள்.

Also Read :ராஜராஜசோழன் இந்துவா இல்லையா? கொந்தளித்த வெற்றிமாறன்

Advertisement Amazon Prime Banner