நடிகர் கஞ்சா கருப்பு பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டது அனைவருக்கும் தெரியும். இவர் மட்டும் தான் 3 நாள் முடிந்து கலகலப்பாக இருக்கின்றார்.

இந்நிலையில் ஆர்த்தி, ஜுலி, காயத்ரி என அனைவருக்குமிடையே பிரச்சனைகள் வெடித்துவிட்டது, எல்லோரும் ஒருவரை ஒருவர் எதிரிகள் போல் பார்த்து வந்தனர்.

கஞ்சா கருப்பு மட்டுமே ஜாலியாக இருக்க, இன்று வரவிருக்கும் பிக்பாஸில் ஓவியா கஞ்சா கருப்புவை பார்த்து ஷெட்-அப் என்று சொல்ல இந்த வார்த்தை அவரை மிகவும் கோபப்படுத்தியது.

உடனே அவர் எழுந்து கோபத்தில் திட்ட ஆரம்பிக்க, எல்லோருமே அதிர்ச்சி அடைந்துவிட்டனர்.