Connect with us

Cinemapettai

இந்திய அணியின் முதுகெலும்பே தல தோனிதான்.. சவுரவ் கங்குலி புகழாரம்

ganguly-dhoni

Sports | விளையாட்டு

இந்திய அணியின் முதுகெலும்பே தல தோனிதான்.. சவுரவ் கங்குலி புகழாரம்

தல தோனி பற்றி முன்னாள் அதிரடி கிரிக்கெட் வீரரான சௌரவ் கங்குலி கருத்து தெரிவித்துள்ளார். தோனியின் ஆட்டத்தை கண்டு நான் எந்த ஒரு விமர்சனமும் கூறுவதில்லை.

ஏனென்றால் சூழ்நிலைகளுக்கு தகுந்தவாறு இந்திய அணியை வெற்றிப்பாதைக்கு அழைத்துச் செல்லும் திறமை வாய்ந்த வீரர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஆப்கானிஸ்தானுக்கு எதிராக 53 பந்துகளில் 28 ரன்கள் எடுத்த தோனி இந்த ஒரு முறை மட்டும் அல்ல இதுபோன்று  முன்னதாகவும் நடந்துள்ளதாக தெரிவித்துள்ளார், ஆகையால் இதனை மட்டும் வைத்து நான் பெரிது படுத்த மாட்டேன்.

ஐந்தாம் நிலையில் இறங்கும் தோனியுடன் ஜோடி சேரும் ஹர்திக் பாண்டியா ஆடுகையில் எளிதாக இருக்கிறது. அவரால் மட்டுமே வித்தியாசமாக விளையாட முடியும் கடைசி நேரத்தில் சிக்ஸர்கள் மற்றும்  பவுண்டரிகள் அடித்து ரேட்டிங்கை சமம் செய்து விடுவார்.

தற்போது வரும் இளம் வீரர்கள் கேரியரே நினைவில் வைத்துக்கொண்டு ரிஸ்க் எடுத்து  ஆட்டம் இழந்தாலும் பரவாயில்லை என்று ஆடுகின்றனர். ஆனால் முழு பொறுப்புடன் ஆடும் தோனி களத்தில் அதிக நேரம் நின்றாலே இந்தியா வெற்றி பெறும் என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

சென்சார் செய்யாத செய்திகள், வீடியோ பார்க்க Youtube-ல் Follow பண்ணுங்க.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top