Connect with us
Cinemapettai

Cinemapettai

ganguly-sana

Sports | விளையாட்டு

குடியுரிமையை எதிர்த்து ட்வீட் போட்ட சனா.. என் பெண்ணை காப்பாற்றுங்கள் என்று கதறிய கங்குலி

தற்போது பிசிசிஐயின் தலைவராக இருக்கும் முன்னாள் கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலி தனது மகளை அரசியல் சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து வெளியிடுமாறு ட்விட்டரில் கோரிக்கை விடுத்தது பெரும் பரபரப்பை கிளப்பியுள்ளது.

அப்படி என்ன செய்தார் சனா?

நாடெங்கும் குடியுரிமை பிரச்சனையை எதிர்த்து மாணவர்கள் போராட்டங்களில் ஈடுபட்டுள்ளனர். மேலும் அரசியல் தலைவர்களுக்கு எதிரான கருத்துக்களையும் வாதங்களையும் சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

அந்த வகையில் சவுரவ் கங்குலியின் மகள் சனா, குடியுரிமை எதிர்த்து ஆளும் கட்சியை குற்றம் சாட்டியுள்ளார். அவர் கூறியதாவது, இந்துவாக இருப்பதால் பாதுகாப்பாக உணரும் நபர்களே, விரைவில் அவர்கள் சொல்படி தான் நீங்கள் நடக்க வேண்டியிருக்கும். மேலும் அவர்கள் கூறும் பற்பசையை தான் பல் துலக்க பயன்படுத்த வேண்டுமெனவும் கோபத்துடன் பதிவிட்டுள்ளார்.

இனி பொது இடங்களில் சாதாரண அவர்களைப் பார்க்கும்போது கூட நாம் எப்போதும் போல் கை கொடுக்க முடியாது. அதற்கு மாறாக, ஜெய் ஸ்ரீராம் என்று சொல்ல வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு விடுவோம் எனவும் ஆளும் கட்சிக்கு எதிராக தைரியமாக ஒரு கருத்தைப் பதிவிட்டுள்ளார்.

sana-tweet

sana-tweet

இந்த கருத்துக்களுக்கு மாணவர்களிடம் ஆதரிப்போம் அரசியல்வாதிகளிடம் எதிர்ப்பும் கிளம்பியுள்ளது. இதனால் பதற்றமடைந்த கங்குலி, சனா இளம்பெண் எனவும், அரசியல் பற்றி அவளுக்கு ஒன்றும் தெரியாது. ஆகவே இந்த பிரச்சனையிலிருந்து அவளை விடுபட வையுங்கள் எனவும் மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

ganguly-tweet

ganguly-tweet

இருந்தும் நாடு முழுவதும் இந்த போராட்டம் வெடித்துள்ள நிலையில், இதற்கு விரைவில் தீர்வு காணவேண்டியது ஆளுங்கட்சியின் கடமையாகும்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top