Connect with us
Cinemapettai

Cinemapettai

ganguly

Sports | விளையாட்டு

அதற்குள் அடுத்த ஐபிஎல் தொடரா? அதுவும் இந்த நாட்டிலா? பிசிசிஐ தலைவர் உறுதி!

தற்போது நடைபெற்றுக் கொண்டிருக்கும் ஐபிஎல் தொடர் மார்ச் மாதத்திலேயே நடக்க வேண்டிய தொடர். கரோனா வைரஸ் காரணமாக மூன்று முறை தள்ளி போடப்பட்ட ஐபிஎல் செப்டம்பர் 19ஆம் தேதி தொடங்கி நவம்பர் 10ஆம் தேதி முடிவடையும்.

பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி கடும் முயற்சிகளை மேற்கொண்டு தற்போது ரசிகர்கள் இல்லாமல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சார்ஜா, அபுதாபி, துபாய் ஆகிய மூன்று மைதானங்கள் நடைபெற்று வருகிறது.

இந்நிலையில் அடுத்த வருட ஐபிஎல் தொடர் ஏப்ரல்,மே மாதங்களில் இந்தியாவில் நடைபெற வாய்ப்புள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் கங்குலி அவர்கள் தெரிவித்திருக்கிறார்.

மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் போன்ற அணிகள் முற்றிலுமாக தங்கள் அணியை மறுகட்டமைப்பு செய்ய வேண்டிய சூழ்நிலையில் இருக்கின்றன.

மேலும் அடுத்த ஐபிஎல் தொடரின்போது இந்த கொரோனா வைரஸ் தடுப்பூசி நிச்சயம் தயாராகிவிடும். அதனால் ஐபிஎல் தொடரை இந்தியாவிலேயே நடத்த பெரிய வாய்ப்பு இருக்கிறது என்று கங்குலி பேட்டியளித்துள்ளார்.

ipl-2020

Continue Reading
To Top