Connect with us

Cinemapettai

கிரிக்கெட் தாதாவை கலாய்த்த செல்ல மகள்.. வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்

ganguly

Sports | விளையாட்டு

கிரிக்கெட் தாதாவை கலாய்த்த செல்ல மகள்.. வயிறு குலுங்க சிரித்த ரசிகர்கள்

வங்கப் புலி என்பதைக் காட்டிலும் கிரிக்கெட் உலகின் தாதா என அனைவராலும் அன்போடு அழைக்கப்படுபவர் சௌரவ் கங்குலி. இவரது தலைமையின்கீழ் இந்திய கிரிக்கெட் அணி பல சாதனைகளை செய்துள்ளது. மேலும் ஆக்ரோஷமாக விளையாட வேண்டும் என்பதை ஆணித்தரமாக நிரூபித்தவர் இவர்.

அதே வழியைத்தான் தற்போது கையாள்வதாக விராட் கோலி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். சௌரவ் கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக பொறுப்பேற்ற பின் நீண்ட நாட்களாக பகல் இரவு போட்டிக்கு டிமிக்கி கொடுத்து வந்த இந்திய அணியை துணிந்து விளையாட வைத்து வெற்றியும் காண வைத்தார்.

பகல் இரவு டெஸ்ட் போட்டி முடிந்த பின்னர் பரிசளிப்பு நடந்த போது எதையோ உற்று கவனிப்பதை போல் எடுத்த புகைப்படத்தை கங்குலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டார். இதற்கு அவரது செல்ல மகள் சனா, உங்களுக்கு எது பிடிக்கவில்லை? என கேட்டார்.

அதற்கு கங்குலியும் நீ மிகவும் கீழ்படியாமல் இருப்பதுதான் என கேலி செய்தார். அதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் சனாவோ, எல்லாம் உங்க கிட்ட இருந்து கத்துகிட்டதுதான் என கலாய்த்து விட்டார்.

இதனை கண்ட இணையதள வாசிகள் சந்தோஷத்தில் பகிர்ந்து வருகின்றனர்.

sana-ganguly

sana-ganguly

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top