புதன்கிழமை, டிசம்பர் 11, 2024

மிரட்டல் விடுத்த கேங்ஸ்டர்.. 60 பேர் கண்காணிப்பு.. பல கோடியில் ஷ்பெஷல் கார் வாங்கிய சூப்பர் ஸ்டார்

இந்தி சினிமா சூப்பர் ஸ்டாரும், பிக்பாஸ் பிரபலமான சல்மானுக்கு பிரபல கேங்ஸ்டர் மிரட்டல் விடுத்துள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் சல்மான்கான் தன் பாதுகாப்பை மேலும் அதிகப்படுத்தியுள்ளார்.

சூப்பர் ஸ்டார் சல்மான் கான்

இந்தி சினிமா சூப்பர் ஸ்டார்களில் ஒருவர் சல்மான் கான். இந்தியாவில் மட்டுமல்ல உலகம் முழுவதும் இவருக்கு கோடிக்கணக்கான ரசிகர்கள், ரசிகைகள் உள்ளனர். இந்த நிலையில், இவர் நடிப்பில் சமீபத்தில் தபங், டைகர் 3 ஆகிய படங்கள் ரிலீசாகின. இவரது நண்பரும் சூப்பர் ஸ்டாருமான ஷாருக்கானின் பதான் படத்தில் கேமியோ ரோலில் நடித்து அசத்தியிருந்தார். இதையடுத்து, அவர் பல முன்னணி இயக்குனர்களுடன் இணைந்து நடிக்கவுள்ளாதாக தகவல் வெளியாகிறது.

அதன்படி, அவர் நடிப்பில் ஏற்கனவே வெற்றி பெற்ற கிக் படத்தின் அடுத்த பாகத்திலும், புல் படத்திலும், ஜவான் படம் மூலம் இந்தி சினிமாவில் இண்டஸ்ட்ரி ஹிட் கொடுத்த அட்லீ இயக்கத்தில் ஒரு புதிய படத்திலும், அட்லீ இயக்கம், ரோகைல் கான் இயக்கத்தில் ஷேர் கான் என்ற படத்திலும் சல்மான் கான் நடிக்கவிருப்பதாக அடுத்து, 10 பெரிய புராஜக்டுகளில் அவர் ஒப்பந்தம் போட்டிருப்பதாகவும் மீடியாக்களில் தகவல் வெளியாகின.

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுப்பாளர்

இந்த நிலையில், சினிமாவில் நடிப்பது மட்டுமில்லாமல், தொலைக்காட்சியின் பல ஆண்டுகளாக பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வருகிறார். இவர் தொகுத்து வழங்கிவருவதும் அந்த பிக்பாஸ் நிகழ்ச்சியின் வெற்றிக்கும் அதன் ரசிகர்கள் எண்ணிக்கையும் அதிகரிக்க காரணம் என கூறப்படுகிறது. இந்த நிலையில், இம்முறை சல்மான் கான் தொகுத்து வழங்கி வரும் பிக்பாஸ் 18 வது சீசன் நிகழ்ச்சியில் நடிகை ஸ்ருதிகா அர்ஜூன் கலந்துகொண்டிருக்கிறார்.

சல்மான் கானுக்கு பிஷ்னோய் மிரட்டல்

58 வயதான சல்மான் கான் இதுவரை திருமணம் செய்துகொள்ளாமல் பேச்சுலராகவே காலம் தள்ளி வருகிறார். அவருக்கு இந்தி சினிமாவில் யாரும் எதிரிகளே இல்லை என்பதுபோல் பாலிவுட்டில் செல்வாக்கு செலுத்தி வரும் அவருக்கு வெளியில்தான் பிரச்சனை இருப்பதாக கூறப்படுகிறது. தற்போது ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் பிரமாண்ட படத்தில் நடித்து வரும் அவருக்கு சமீபத்தில் பிரபல கேங்ஸ்டரிம் இருந்து கொலைமிரட்டல் விடுக்கப்பட்ட சம்பவம் பாலிவுட்டையே அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

இந்த நிலையில் சில நாட்களுக்கு முன்பு சல்மான் கான் வீட்டிற்கு அருகில் துப்பாக்கிச்சூடு சம்பவம் நடந்து நாட்டையே அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிலையில் சல்மான் கானை கொல்வதற்காக, சிறையில் உள்ள பிரபல கேங்ஸ்டர் லாரன்ஸ் பிஷ்னோய் கும்பல் ரூ.25 லட்சம் பேரம் பேசியதாகக் கூறப்படுகிறது. மேலும், இதுகுறித்து போலீஸார் மேற்கொண்ட விசாரணையில், ஆயுதங்களை சப்ளை செய்ததாகக் கூறி 2 பேரை அதிரடியாக கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதற்கிடையே, சல்மான் கானுக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாமல் இருக்க வேண்டும் எனில் ரூ.5 கோடி தர வேண்டும் எனக் கேட்டு மும்பை போக்குவரத்து காவல்துறையினரின் வாட்ஸ் ஆப் எண்ணுக்கு மர்ம நபர்களால் மிரட்டல் விடுக்கப்பட்டது. அதாவது, சல்மான் கான் மானை வேட்டையாடிய சம்பவம் தொடர்பாக மானை கடவுளாக வழிபடும் பிஷ்னோய் கும்பல், சல்மான் கானுடடான விரோதத்தை முடிவுக்கு கொண்டுவந்து, அவரை எதுவும் செய்யாமல் இருப்பதற்காக ரூ.5 கோடி தர வேண்டும் எனவும், இதைச் செய்யாவிட்டால் சமீபத்தில் கொல்லப்பட்ட மகாராஷ்டிர முன்னாள் அமைச்சரும், சல்மான் கானின் நெருங்கிய நண்பருமான பாபா சித்திக்கைவிட சல்மான் கானை கொல்லப்படுவார் என மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.

போலீஸ் பாதுகாப்பு

இந்த நிலையில், கைது செய்யப்பட்டவர்களிடம் போலீஸார் விசாரித்ததில் பிஷ்னோய், சல்மான் கானையும் அவரது வீட்டையும் கண்காணிக்க 60க்கும் மேற்பட்டோரை நியமித்திருப்பதாக அதிர்ச்சிகர தகவல் வெளியானது. கடந்த ஏப்ரல் மாதம் சல்மான் கான் வீட்டின் மீது துப்பாக்கிச் சூடு நடந்தது. இந்த நிலையில், சல்மான் கானின் பந்த்ராவின் கேலக்ஸி அடுக்குமாடி வீட்டிற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

ரூ.2 கோடி மதிப்பிலான குண்டுதுளைக்காத கார்

இந்த நிலையில் கேங்ஸ்டர் பிஷ்னோய் மற்றும் அவரது கும்பலிடம் இருந்து உயிரைப் பாதுக்காக்க வேண்டி சல்மான் கான் பல அடுக்கு பாதுகாப்புகளை மேற்கொண்டு வரும் நிலையில் அவரிடம் ஏற்கனவே பல சொகுசு கார்கள் இருந்தாலும் கூட, தற்போது துபாயில் இருந்து ரூ.2 கோடி மதிப்பிலான குண்டுதுளைக்காத கார் ஒன்றை வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகிறது. சல்மான் கானுக்கு ஏற்பட்டது போல் மற்ற நடிகர்களுக்கு அச்சுறுத்தல் வரலாம் என்பதால் மிரட்டல் விடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என சினிமா நட்சத்திரங்களும், ரசிகர்களும் அரசிடம் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

- Advertisement -

Trending News