fbpx
Connect with us

Cinemapettai

மக்களை முட்டாளாக்கும் அண்ணன், தம்பி.. திடீர் பல்டி அடித்த கங்கை அமரன்

ilayaraja-gangai-amaran

News | செய்திகள்

மக்களை முட்டாளாக்கும் அண்ணன், தம்பி.. திடீர் பல்டி அடித்த கங்கை அமரன்

96 படத்தில் இளையராஜாவின் பாடலை பயன்படுத்தியதற்காக இளையராஜா ஒரு பேட்டியில் “இது ஆண்மையில்லாதனத்தை காட்டுகிறது” என்று கடுமையாக கூறினார். மேலும் அந்த படத்திற்கு ராயல்டி தொகை வாங்கிக் கொண்டு பேசியது பெரும் அதிர்ச்சியாக இருக்கிறது.

ஏற்கனவே இளையராஜா பாடல்களுக்கு ராயல்டி தொகை கேட்டதற்கு அவருடைய தம்பி கங்கை அமரன் எதிர்ப்பை தெரிவித்தார். ஆனால் இப்பொழுதுதான் எனக்கு ஞானோதயம் பிறந்தது, அப்படி நான் பேசியது தவறு என்று விளக்கம் கொடுத்திருக்கிறார்.

இது பற்றி கங்கை அமரன் கூறுவது “பெரிய ஞானிகள் பேசும் பொழுது அதை ஏற்றுக் கொள்ளத்தானே வேண்டும் என்றும், ராயல்டி தொகை கேட்பதில் தவறில்லை என்றும், அப்பொழுது நான் விவரம் எதுவும் தெரியாமல் பேசி விட்டேன் என்றும் கூறியிருக்கிறார்.

மேலும் 96 படத்தில் 90களில் நடக்கும் கதைகளின் காலத்திற்கு ஏற்றது போல் பாடல் போட வேண்டும். அப்படி போட முடியவில்லை என்றால், இளையராஜா கூறுவதை ஏற்று கொள்ள வேண்டும், ஆண்மையில்லாதனத்தை காட்டுகிறது என்று சொல்வதில் தவறில்லை என்று கூறினார் கங்கை அமரன்.

மேலும் நான் இளையராஜா பற்றி முன்பு பேசியபோது எனக்கு விவரம் தெரியவில்லை, அதனால் ராயல்டி குடுத்து விட்டு பாடல் போட வேண்டும் என்றும், வீட்டில் குடி வந்துவிட்டு வாடகை குடுக்கவில்லை என்றால் தவறுதான் என்றும் கூறினார். (இதே வாய்தான் முன்பு நீ சாப்பிடற இரண்டு இட்லி,கொஞ்சம் பொங்கலுக்கு இதெல்லாம் தேவையா, அவ்வளவு பணத்தை எங்க கொண்டு போக போறிங்கனு  இளையராஜாவை கூறினார்)

இப்பொழுது இளையராஜாவுடன் எஸ் பி பாலசுப்ரமணியம் சேர்ந்து கொண்டார்கள, இளையராஜாவை குறை கூறிய கங்கை அமரன் சேர்ந்து கொண்டார், சண்டை போட்டு கொண்டவர்கள் இணைந்து விட்டார்கள். ஆனால் இவர்களுக்காக குரல் குடுத்து சண்டை போட்டுக் கொண்ட மக்கள் இன்னும் இணையாமல் இருக்கிறார்கள்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top