இசையமைப்பாளர், நடிகர், பாடகர், பாடலாசிரியர் என பல திறமைகளை கொண்டவர் கங்கை அமரன். இவர் சமீபத்தில் ஒரு வார இதழில் பேட்டியளித்துள்ளார்.இதில் இளையராஜா குறித்து ‘ராஜா நான் இயக்கிய சின்னவர் படம் ஓடினால், இனி ஆர்மோனியத்திலேயே கை வைக்க மாட்டேன் என கூறினார்.

ஆனால், படம் ஓடியது, இதற்கு அடுத்து நான் கமல்ஹாசனை வைத்து ஒரு படம் இயக்குவதாக இருந்தது, ராஜா, கமலிடம் “சின்னவர் படம் சரியில்லை, என் தம்பி என்பதற்காக நீ சம்மதிக்காதே” என்று கூறி அந்த படத்தை நிறுத்தினார்.இதன்பின் கமல் எடுத்த தேவர்மகன் படத்தில் ஒரு சில காட்சிகள் என்னுடையது, இதை கமல் இன்று வரை எந்த ஒரு இடத்திலும் ஏற்றுக்கொள்வதே இல்லை’ என கூறியுள்ளார்.