கங்கை அமரன் சமீப காலமாக மனதில் பட்டதை வெளிப்படையாக பேசி சர்ச்சையில் சிக்கி கொள்கிறார். சில தினங்களுக்கு முன் கங்கை அமரன், கமல்ஹாசன் குறித்து சர்ச்சை கருத்து ஒன்றை கூறினார்.

இந்நிலையில் சமீபத்தில் ஒரு வார இதழில் இவர் ‘தற்போதெல்லாம் என்ன இசையமைக்கிறார்கள்?, எந்த பாடலையும் கேட்க முடியவில்லை.அஜித் படத்தில் “ஆலுமா டோலுமா”ன்னு ஒரு பாடல், விஜய் படத்தில் “ஜித்து ஜில்லாடி”ன்னு ஒரு பாடல் இப்படியெல்லாம் மோசமாக பாடல் எழுதுகிறார்கள்.

இந்த கொடுமை விஜய், அஜித்திற்கு தெரியாதா? இப்படியெல்லாம் பாடல்கள் எழுதி தமிழை கொலை செய்கிறார்கள்’ என கோபமாக கூறியுள்ளார்.