தமிழகத்தில் கடந்த சில நாட்களாக வைரலாகும் பெயர் சின்னம்மா. ஜெயலலிதாவின் தோழியான சசிகலாவுக்கு அதிமுக சார்பில் ஆதரவு இருந்தாலும் மக்களிடையே வெறுப்புதான் மிஞ்சுகிறது.

இந்நிலையில் ‘அறப்போர் இயக்கம்’ என்ற அமைப்பு ஆய்வு ஒன்றை மேற்கொண்டு “WHO IS THE BENAMI QUEEN OF TAMILNADU” என்ற பெயரில் முதல் வீடியோ ஒன்றை அண்மையில் வெளியிட்டது. இதில் சசிகலா பெயரில் 5 ஆயிரம் கோடிக்கு மேல் சொத்துக்கள் இருப்பதாக தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

அதைதொடர்ந்து தற்போது இன்னொரு வீடியோ வெளியாகியுள்ளது. இதில் பாடகர், இசையமைப்பாளர், இயக்குனர் கங்கை அமரனின் பண்ணை வீட்டை சசிகலா குடும்பத்தினர் பிடுங்கிக் கொண்டது தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவரிடமே கேட்டால், ” ஆமாம். பிடுங்கிக் கொண்டார்கள். பேசினால் சொத்து திரும்ப கிடைத்து விடுமா? போனது போனதுதான்” என வருத்ததுடன் பேசினார். ஒரு பிரபலத்துக்கே இந்த நிலைமை என்றால் மக்கள் நிலையை சொல்லவா வேண்டும்.