Tamil Cinema News | சினிமா செய்திகள்
காந்தி ஜெயந்தி ஸ்பெஷல்.. எந்தெந்த சேனல் என்னென்ன படம் தெரியுமா?
என்னதான் விடுமுறை நாட்களில் தியேட்டர் சென்று படங்களை பார்த்தாலும் டிவி சேனல்களில் விடுமுறை தினம் புதுப்படங்கள் இன்றி நிறைவு பெறாது என்பது அனைவரும் அறிந்ததே.
என்ன என்ன சேனல் என்ன என்ன படம் பாக்கலாமா..
உங்கள் சன் டிவியில் காலை 10 மணிக்கு ஆர். ஜே. பாலாஜி நடித்த எல்.கே.ஜி திரைப்படம், மதியம் 12 மணிக்கு சூப்பர் ஸ்டார் நடித்த முத்து திரைப்படம் மற்றும் மாலை 3.30 க்கு ஜெயம் ரவி நடித்த நிமிர்ந்து நில் திரைப்படம் திரையிடப்படுகிறது.
உங்கள் கே. டிவியில் காலை 10 மணிக்கு அருள்நிதி நடித்த இரவுக்கு ஆயிரம் கண்கள், மதியம் 1 மணிக்கு சசிகுமார் நடித்த பிரம்மன், மாலை 4 மணிக்கு அதர்வா நடித்த பரதேசி, இரவு 8 மணிக்கு தனுஷ் நடித்த வேலையில்லா பட்டதாரி 2 ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
உங்கள் ஜீ தமிழில் காலை 9.30 மணிக்கு யூ.ஆர்.ஐ சர்ஜிகல் ஸ்ட்ரைக், மதியம் 12.30 மணிக்கு சசிகுமார் நடித்த கொடிவீரன், மாலை 3.30 மணி பிரபுதேவா நடித்த லக்ஷ்மி திரைப்படம் திரையிடப்படுகிறது.
உங்கள் ஜெயா டிவியில் காலை 10 மணிக்கு ஜோக்கர் மற்றும் மதியம் 2.30 மணிக்கு ஜி.வி. பிரகாஷ் நடித்த குப்பத்து ராஜா ஆகிய படங்கள் திரையிடப்படுகிறது.
