fbpx
Connect with us

திக் திக் பக் பக் – ம்யூசிக்கல் திரில்லர் ‘கேம் ஓவர்’ திரைவிமர்சனம்.

Reviews | விமர்சனங்கள்

திக் திக் பக் பக் – ம்யூசிக்கல் திரில்லர் ‘கேம் ஓவர்’ திரைவிமர்சனம்.

நயன்தாராவின் மாயா படம் வாயிலாக இயக்குனர் அவதாரம் எடுத்தவர் அஸ்வின் சரவணன் . அவரின் அடுத்த படம் தான் “கேம் ஓவர்” .

அஸ்வின் சரவணன் அவருடன் இணைந்து கதை காவ்யா ராம்குமார் எழுதியுள்ளார். ஸ்க்ரிப்டுகளில் வித்யாசமான முயற்சிகளை புதிய களத்தை ஆதரிக்கும் Y Not Studios, ரிலையன்ஸ் என்டேர்டைன்மெண்ட் இணைந்து தயாரிக்கும் படம். ஒரு சில படங்களை தனிப்பட்ட ஜானரில் சேர்த்துவிட முடியாது. அப்படிப்பட்ட கதையே இப்படமும். 102 நிமிடங்களில் இத்தனை விஷயங்களை எப்படிப்பா இந்த இயக்குனர் புகித்தினார், என்பதே நமக்கு பெரிய வியப்பை தருகின்றது.

கதை – சென்னை புறநகரில் கொடூரமாக தனித்து இருக்கும் பெண்ணின் தலையை அறுத்து கொடூரமாக கொலை செய்து, அவளின் உடலை எரித்து தலையை வைத்து கால்பந்தாட்டம் ஆடுவதுடன் துவங்குகிறது படம். ஹீரோயின் டாப்ஸீ பண்ணு வீட்டில் இருந்தே வேலை செய்யபவள் (Game Developer). பெரிய பங்களா, முழுவதும் காமெரா மானிட்டரிங் வசதியுடன். துணைக்கு வேலைக்கார பெண்ணாய் வினோதினி மற்றும் வாட்ச்மேன். இருட்டை பார்த்தல் வெலவெலத்து அட்டாக் வரும் மனநோய் இவருக்கு; முன்பு ஏற்பட்ட பாலியல் தொல்லையின் விளைவே இந்த மனநோய். மேலும் அதே நாள் மீண்டும் அடுத்த வருடம் நெருங்க உள்ள சூழலில் இவருக்கு பிரச்சனை அதிகரிக்கிறது. இவர் கையில் போடப்பட்ட டாட்டூவில் இறந்துபோன பெண் ஒருவரின் அஸ்த்தி கலந்துள்ளது என்ற தகவலும் வெளியாகிறது. இதெல்லாம் எப்படிபா ஒன்றாக இணையும் எவ்வாறு கதை நகரும் என நமக்கும் மண்டை குழம்ப ஆரம்பிக்கிறது.

ஒரு வருடம் கழித்து அதே டிசம்பர் 31, இவருக்கு பிரச்சனை 11 மணிக்கு துடங்குகிறது. படத்தின் ஆரம்பத்தில் கொலை செய்தவன், இவள் வீட்டில் நுழைகிறான். “லூப் (loop) சினிமா” என்ற கான்செப்டில் பயணிக்கிறது திரைக்கதை. தற்பொழுது இவரது வாழ்வே கேம் போல மாறுகிறது. மூன்று லைப் என்பது போல அந்த டாட்டூவில் கலந்த பெண்ணின் அஸ்த்தி வாயிலாக மாறுகின்றது. எவ்வாறு முயன்று இவர் தனது சாவினை தவிர்த்து எதிரியை வீழ்த்தினார் என்பதுடன் கேம் ஓவர் ஆகிறது.

அலசல் – படத்தின் டெக்கினிக்கல் டீம் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அதிலும் குறிப்பாக கலை இயக்குனர் ஷிவா ஷங்கர் மற்றும் இசையமைப்பாளர் ரான் யோஹானுக்கு ஸ்பெஷல் க்ளாப்ஸ். முன்னவர் கேமரின் வீட்டை நம் கண் முன் கொண்டுவந்துள்ளார்; பின்னவர் தன் இசை வாயிலாக நம்மை சீட் நுணியில் அமரவைக்கிறார். டாப்ஸீ மற்றும் வினோதினியின் நடிப்பு டாப் க்ளாஸ்.

முழுவதையும் புட்டு புட்டு வைக்காமல் படம் பார்ப்பவரின் கற்பனை திறனுக்கு சில விஷயங்களை விட்டுவிடுகிறார் இயக்குனர். இதுவே படத்திற்கு ஒரு புறம் ப்ளஸாக இருந்தாலும், மறுபுறம் அதுவே மைனஸ் ஆகிறது. இப்படம் சொல்லும் விளக்கங்களை விட, பதில் சொல்லாத கேள்விகளே அதிகம். கொலை செய்பவன் பின்னணி என்ன ? பெண்களை தேர்ந்தெடுக்க என்ன லாஜிக் ? தனித்திருக்கும் பெண் அவன் டார்கெட் என்றால், ஏன் டாப்ஸீ போன்ற பெண்; அதுவும் cctv, safety system உள்ள வீடு போன்றவை சில .. மேலும் பல அடுக்கிக்கொண்டே போகலாம். ஒரு வேலை அடுத்த பார்ட்டில் விளக்கங்கள் தருவாரா என்னவோ இயக்குனர்.

ஆகமொத்தத்தில் இப்படம் ஏ சென்டர் ரசிகர்களுக்கான ஸ்பெஷல் ட்ரீட் என்றால் அது மிகையாகாது. படக்குழுவின் டார்கெட்டும் மல்டி ப்ளெக்ஸ் ரசிகர்கள் தான்.

ரேட்டிங்
உலக சினிமா ரசிகர்களுக்கு 3.5 / 5
ஏ சென்டர் ஆடியன்ஸ் 3/5
சாமானியன் 2.25 / 5

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top