fbpx
Connect with us

ஸ்மித், வார்னர் தண்டனை! பழிதீர்க்கிறதா கிரிக்கெட் ஆஸ்திரேலியா ? சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட கம்பிர் !

ஸ்மித், வார்னர் தண்டனை! பழிதீர்க்கிறதா கிரிக்கெட் ஆஸ்திரேலியா ? சர்ச்சைக்குரிய கருத்தை பதிவிட்ட கம்பிர் !

கவுதம் கம்பிர்

இந்தியாவின் சிறந்த துவக்க பாட்ஷமான்களில் இவரும் ஒருவர். டி 20 , ஒரு நாள் போட்டி, டெஸ்ட் என அனைத்து வித போட்டிகளிலும் உள்ளூர் மற்றும் வெளிநாடுகளில் கலக்கியவர். சிறந்த வீரராக இருப்பினும், நேர்பட பேசுபவர். தவறு செய்வது யாராயினும் சுட்டிக்காட்ட தயங்காதவர். அதன் காரணமாகவே இவர் பல நேரங்களில் கிர்கிட் பாலிடிக்சில் சிக்கி பாதிக்கப்பட்டுள்ளார்.

இவர் தன் ட்விட்டரில் கிரிக்கெட் ஆஸ்திரேலியா ஸ்மித் மற்றும் வார்னருக்கு ஒரு வருட தடை அளித்ததை பற்றி காரசார விவாதத்துக்கு உட்படும் டிவீட்களை பதிவு செய்துள்ளார். மேலும் ஸ்மித்துக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்துள்ளார்.

“நான் எமோஷனல் ஆகி தான் சொல்கிறேன், என்னை பொறுத்தவரை ஸ்மித் ஏமாற்றுக்காரர் கிடையாது. எனக்கு அவரை பெர்சனலாக தெரியாது. எப்படியாவது தனது நாட்டிற்க்காகவும், டீமிற்க்காகவும் போட்டியை ஜெயிக்க முயன்ற தலைவராக தான் தோன்றுகிறார். அவர் கையாண்ட முறை வேண்டும் என்றால் கேவிக்குறியானது ஆனால் அவர் மோசடிக்காரர் என முத்திரை குத்த கூடாது.”

steve smith with his father

“ஸ்மித்தின் தந்தை மற்றும் குடும்பத்தை நினைத்து மிகவும் வருத்தம் அடைகிறேன். மீடியா மற்றும் ஆஸி மக்கள் அவர் குடும்பத்தை சேர்ந்தவர்களை டார்கெட் ஆக்க கூடாது என்பது என் வேண்டுகோள். தண்டனை காலத்தை அனுபவிப்பதை விட, இம்மாதிரியான மோசடிக்காரன் என்ற பெயருடன் வாழ்வது தான் மிகப்பெரிய தண்டனை.”

“கிரிக்கெட்டில் ஊழல் அற்றதாக இருக்க வேண்டும் என்பதில் ஐயமில்லை. ஆனால், ஆஸ்திரேலியா போர்டு ஸ்மித், வார்னருக்கு அளிக்கப்பட்ட தண்டனை மிகவும் அதிகம். சமீபத்தில், தனது அணியினருக்காக சம்பள உயர்வு விவகாரத்தில் ஸ்மித், வார்னர் ஆஸ்திரேலிய கிரிக்கெட் போர்டை எதிர்த்தனர். அதற்க்கான விளைவோ இது ? இதற்கு முன்னும் வீரர்களுக்காக குரல் கொடுத்தவர்களை நிர்வாகிகள் இது போல் ஏளனம் செய்துள்ளார்கள். உதாரணம் இயன் சாப்பெல் விவகாரம்” என்று டீவீடீயுள்ளார்.

அனைவரும் ஆஸ்திரேலியாவின் மானம், ஸ்பிரிட் ஆப் கேம் என்று பேசி வந்த நிலையில், இது நிர்வாகிகள் தலைவர் மற்றும் துணை தலைவர் மீது எடுக்கும் பழி வாங்கும் நடவடிக்கை என புதிய கோணத்தில் இந்த பிரச்னையை வெளிக்காட்டுகிறார் கம்பிர்.

Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More in

Advertisement

Trending

To Top