கோலி ஒரு அப்ரண்டிஸ் கேப்டன்.. கடுமையாக விமர்சித்த பிரபல கிரிக்கெட் வீரர்

நடந்து வரும் ஐபிஎல் போட்டியில் விராட் கோலி தலைமையிலான பெங்களூர் அணி கடைசியாக நடந்த 6 போட்டிகளில் அனைத்திலும் தோல்வியை பெற்றது. இதனால் கடும் டென்ஷனில் உள்ள கோலி பந்துவீச்சாளர்களை குறை கூறியிருந்தார்.

ஆனால் கம்பீர் கோலியை பற்றி கடுமையாக விமர்சனம் செய்துள்ளார் ” விராட் கோலி என்ற பேட்ஸ்மேன் முழுமையான மாஸ்டர். ஆனால், விராட் கோலி என்ற கேப்டன் ஒரு அப்பிரண்டீஸ். அவர் இன்னும் நிறைய கற்றுக் கொள்ள வேண்டும். பந்துவீச்சாளர்களை குறை சொல்வதை விட்டுவிட்டு அவரே குற்றத்தை ஏற்றுக் கொள்ள வேண்டும்”

மேலும் ஐபிஎல் தொடருக்கு முன்பே கோலி வெற்றி பெற்றுக் கொடுக்காமல், எப்படி தான் பெங்களூர் அணிக்கு கேப்டனாக இருக்கிறாரோ? என விமர்சித்து இருந்தார்.

பெங்களூர் அணியின் தவறுகள் என்று கம்பீர் கூறுவது, “கடந்த வருட ஏலத்தில் அவர்கள் சொதப்பியதில் இருந்து நான் தொடங்குகிறேன். மார்க்ஸ் ஸ்டாய்னிஸ், நாதன் கோல்டர்நைல் ஆகிய இருவரும் தொடக்கம் முதலே ஐபிஎல் தொடரில் ஆட முடியாது என்று தெரிந்தும் அவர்களை ஏன் வாங்கினார்கள்?” என்று கேட்டுள்ளார்.

யாரை வாங்க வேண்டும்? மேலும், மார்கஸ் ஸ்டாய்னிஸ் போன்ற ஆல்ரவுண்டரை வாங்கியதில் உள்ள தவறு ஒன்றையும் சுட்டிக் காட்டியுள்ளார். “சின்னசுவாமி மைதானம் (பெங்களூர் அணியின் மைதானம்) போன்ற சிறிய மைதானத்தில், ஆடுகளம் தட்டையாக இருக்கும் நிலையில், நான் முழுமையான வேகப் பந்துவீச்சாளரை தேர்வு செய்து இருப்பேன்” என கூறியுள்ளார்.

Leave a Comment