fbpx
Connect with us

நண்பா என் போஸை திருடிட்டே! Deadpool ஐ கலாய்க்கும் Wonder Woman ! இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே !

Hollywood | ஹாலிவுட்

நண்பா என் போஸை திருடிட்டே! Deadpool ஐ கலாய்க்கும் Wonder Woman ! இணையத்தை கலக்கும் போட்டோ உள்ளே !

ஒரு வருடத்தில் ஹாலிவுட் படங்களில் அதிகமாக வசூல் செய்த 10 படங்கள் என கணக்கு எடுத்தால் அதில் முக்கால்வாசியை ஆட்கொள்வது டி சி மற்றும் மார்வெல் காமிக்ஸின் படங்களாக தான் இருக்கும். அந்தளவுக்கு உலகளாவிய ரசிகர்களை உடையவர்கள்.

டெட் பூல் 2

எக்ஸ்மென் பட வரிசையில் வெளிவரும் படம். ஏற்கனவே முதல் பாகம் வெளிவந்து ஹிட் ஆன நிலையில் இப்படத்தின் இரண்டாம் பாகம் வரும் மே 19 து ரிலீஸ் ஆகிறது. இந்த டெட் பூல் கதாபாத்திரம் மார்வெல் காமிக்ஸ் உடையது . இப்படத்தில் டெட் பூல் வேடத்தில் ரியான் ரெனால்ட்ஸ் என்பவர் நடித்க்கிறார்.

ஒண்டெர் ஒமன்

இந்த கதாபாத்திரம் டி சி காமிக்சின் கதாபாத்திரம். முதல் பாகம் வந்து ஹிட் ஆன நிலையில், இரண்டாம் பாகம் ஷூட்டிங் விரைவில் துவங்க உள்ளது. ஒண்டெர் ஒமன் கதாபாத்திரத்தில் கேல் கடோட் நடித்திருப்பார்.

சமீபத்தில் டெட்பூல் ட்ரைலர் வெளியாகி நல்ல ரீச் ஆனது. இந்நிலையில் அந்த ட்ரைலரில் ஒரு குழுவை சேர்த்து விட்டு, ஹீரோ நாம் x போர்ஸ் என்பார் செய்கையுடன். இதே போன்ற போஸ்ஸை தான் ஒண்டெர் ஒமன் தன் கைகளில் உள்ள ப்ரெஸ்லெட்டை ஆக்டிவேட் செய்ய பயன்படுத்துவார்.

எனவே அவர் தன் ட்விட்டரில் கேல் கடோட், டெட் பூல் பட ஸ்டில்லை ட்விட்டரில் அப்லோட் செய்து, “நண்பா ! என் லுக்கை திருடி விட்டாய்.” என்று ரெய்னோல்ட்ஸை டேக் செய்தார்.

Gal Gadot-Ryan Reynolds-X

அதற்கும் அவரும் தன் கதாபாத்திர ஸ்டைலில் குசும்பாய் “அடுத்தவரின் ஸ்டைலை பின்பற்றுவது நேர்மையான திருட்டு.” என்று பதில் அளித்தார்.

இந்த டீவீட்டுக்களை பல காமிக்ஸ் ரசிகர்கள் விளையாட்டாக ஷேர் செய்து வருகின்றனர். நம் நெட்டிசன்கள் பல வகை மேமே உருவாக்கி களைத்து வருகின்றனர்.

meme comics marvel dc

வேறு சிலரோ அட இதே போஸ், பிளாக் பாந்தர் படத்தில் கூட வருமே என்கின்றனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top