fbpx
Connect with us

Cinemapettai

கஜினி பட கதையை கேட்டு அஜித் கேட்ட முதல் கேள்வி? 14 வருடங்கள் கழித்து முருகதாஸ் கூறிய சீக்ரெட்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

கஜினி பட கதையை கேட்டு அஜித் கேட்ட முதல் கேள்வி? 14 வருடங்கள் கழித்து முருகதாஸ் கூறிய சீக்ரெட்

இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தளபதியை வைத்து கத்தி மற்றும் சர்க்கார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்தவர். தற்போது தலைவர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வைத்து தர்பார் இயக்கி உள்ளார் இந்த படம் வரும் பொங்கலுக்கு வெளிவர பிரம்மாண்டமாக காத்துக் கொண்டிருக்கின்றது.

இவர் இயக்கிய முதல் படமான தீனாவில் தல அஜித்தை வைத்து வெற்றி கண்டவர் என்பது அனைவரும் அறிந்ததே. அஜித்தை வைத்து மீண்டும் ஒரு படம் இயக்க வேண்டும் என்ற வேகத்தில் தரமான கதையையும் கையில் வைத்துக்கொண்டு அஜித்தின் அழைப்பு வரும் என்று காத்துக் கொண்டிருக்கிறார்.

அஜித் நடிப்பதாக இருந்த கஜினி படத்தின் போது நடந்த சுவாரசியமான சம்பவம் ஒன்றை  பேட்டியில் கூறியுள்ளார் முருகதாஸ். அது என்னவென்றால் அப்போதே கஜினி படத்திற்காக தான் சிக்ஸ் பேக் வைக்கவா என்று கேள்வி எழுப்பியுள்ளார் அஜித்.

ஆனால் இயக்குனர் முருகதாஸுக்கு சிக்ஸ்பேக் அப்படி என்றால் என்ன என்று  தெரியவில்லையாம், ஆனால் ஹிந்தி ரீமேக்கில் கஜினி படத்தை இயக்கும் போது இந்த  யோசனையை அமீர்கானிடம் கூறினாராம். அப்போது தல அஜித் கூறிய யோசனை தற்போது நிறைவேறியதாக பெருமையாக தெரிவித்துள்ளார் முருகதாஸ்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top