fbpx
Connect with us

டெல்டா மாவட்டங்களில் மீட்டெடுப்பதற்கான ஒரு புதிய முயற்சி.. கைகோர்த்து உதவுங்கள்..!

gaja-delta

News | செய்திகள்

டெல்டா மாவட்டங்களில் மீட்டெடுப்பதற்கான ஒரு புதிய முயற்சி.. கைகோர்த்து உதவுங்கள்..!

காஜா புயல் மக்களின் முழு வாழ்வாதாரத்தை சுருட்டிக் கொண்டு சென்றுவிட்டது. இன்னும் பல இடங்களில் மின்சாரம் இன்றி குடிக்கத் தண்ணீர் இன்றி தவிக்கின்றனர்.தஞ்சை, திண்டுக்கல், திருவாரூர், நாகை, புதுக்கோட்டை மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 493 நிவாரண முகாம்களில் 2,49,083 பேர் உள்ளனர்.

gaaja-help

gaaja-help

சுமார் 45 பேர் உயிரிழந்திருக்கக் கூடும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மற்றும் 1.25 வீடுகள் முழுமையாக சேதமடைந்துள்ளது. 88 ஆயிரம் எக்டேர் விவசாய நிலங்கள் இந்த புயலால் பாதிக்கப் பட்டுள்ளது. 300-க்கும் மேற்பட்ட மின்சார ஊழியர்கள் நிவாரண பணிக்காக அனுப்பப்பட்டுள்ளனர்.

மற்றவர்களுக்கு கொடுத்து கொடுத்து வாழ்ந்த விவசாய குடும்பங்கள் இன்று நம்மிடம் கேட்பதற்குமனம் இல்லாமல் தவித்துக் கொண்டிருக்கின்றனர். குழந்தைகளின் பசியாற்றுவதற்காவது உதவுங்கள் .பெரும்பாலன மக்களின் கையிருப்பு உணவுகளும் முடிந்துவிட்டது இனி எங்கள் மக்கள் உங்களின் நிவாரண பொருட்களை நம்பி .
காஜா புயலின் தாக்கத்தால் மக்கள் பெரும் வேதனையில் உள்ளனர் அவர்களுக்கு கைகொடுக்கும் விதமாக நம்மால் இயன்ற உதவிகளை செய்வோம்.

gaja-helping

gaja-helping

நம்மளோட ஒருநாள் செலவு ஒரு குடும்பத்தின் பசியைப் போக்கும் ஆகையால் நம் விவசாய குடும்பங்களுக்கு கைகோர்ப்போம் காப்பாற்றுவோம்.  காப்பாற்றுவீர்கள் என்ற நம்பிக்கையில் கீழே சில தகவல்களை பதிவிட்டுள்ளோம் அதன் மூலம் நீங்கள் உதவி செய்யலாம். அவர்கள் நம்பிக்கையானவர்கள் என்பதையும் இதோடு சேர்த்து இணைத்துள்ளோம்.

gaaja-1

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top