kaya-puyal-1
kaya-puyal-1

கடந்த இரண்டு நாட்களாக பரபரப்பாக பேசப்பட்ட ஒரு செய்திகள் கஜா புயல், கஜா புயல் இன்று வருமா , நாளை வருமா என்று எதிர்பார்த்த நிலையில், கஜா புயல் நேற்று இரவோடு இரவாக வந்து சென்றுவிட்டது, புயல் சென்றுவிட்டாலும் அது ஏற்படுத்திய பாதிப்புகள் இன்னும் சென்ற பாடில்லை. சென்னையில் கஜா புயல் காரணமாக ஒரு லட்சம் பேருக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான இடங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

அதிகம் படித்தவை:  லைசன்ஸ் இனி செல்லாதா.? வெளியான முக்கிய செய்தி.!
kaja-puyaal
kaja-puyaal

நேற்று இரவு 12 மணி முதல் 3 மணி இடையில் கஜா புயல் கரையை கடந்தது .புயல் கரையை விட்டு சென்ற போது 120 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. கஜா புயல் காரணமாக 7 மாவட்டங்கள் பெரும் பாதிப்பை சந்தித்தன. அந்த பகுதி மக்கள் பாதுகாப்பான இடத்தில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.நாகை, தஞ்சை, திருவாரூர், கடலூர், புதுக்கோட்டை, ராமேஸ்வரம், இந்த மாவட்டங்களில் மொத்தம்570 மீட்பு முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளன.

அதிகம் படித்தவை:  கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக 5 கோடியை நிவாரண நிதியாக கொடுத்த நடிகர் இவர்தான்.!
gaja-cyclone 1
gaja-cyclone 1

பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களுக்காக உணவு மற்றும் அத்தியாவசிய தேவையான பொருள்கள் வழங்கப்பட்டு வருகின்றன, பெரியவர் முதல் சிறியவர் வரை குழந்தைகள் உட்பட அனைவரும் பாதுகாப்பான இடங்களில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கஜா காரணமாக மொத்தம் 22 மாவட்டங்களில் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

kaya-puyal-1
kaya-puyal-1

பாதிக்கப்பட்ட இப்பகுதி மக்களின் உதவிக்காக 15000 அதிகமான பணியாளர்கள் மீட்பு பணி செய்வதற்காக நியமிக்கப்பட்டுள்ளன.