India | இந்தியா
கஜா புயல்- பெரிதும் பாதிக்கப்பட்ட கடவூர் மக்கள், கோரிக்கை குடுத்தும் கண்டு கொள்ளாத அதிகாரிகள்
தமிழ்நாட்டில் கரூர் மாவட்டத்தில் ஆறு வருவாய் வட்டங்களில் கடவூர் ஒன்றாகும். கரூரில் ஐந்தாவது வருவாய் வட்டமாகவும் குளித்தலை வட்டத்தில் 20 வருவாய் கிராமங்களையும் கொண்டதாகவும்.இப்பகுதி மக்களுக்கு விவசாயத்தை மட்டுமே வாழ்வாதாரமாக கொண்டவர்கள் ஊருக்கே உணவளித்த இவர்கள் இப்பொழுது தவித்து வருகின்றனர்.
கடவூர் வட்டத்தின் வட்டாச்சியர் அலுவலகம் தரகம்பட்டியில் உள்ளது. கடவூர் சுற்றிலும் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளன. இருப்பினும் அங்கு கஜா புயலால் பெருமளவு சேதத்தை சந்தித்துள்ளன. நாகை போன்ற மாவட்டங்கள் பாதிப்பு அனைவருக்கும் தெரியும். ஆனால் கிராம பகுதியில் உள்ள ஊர்களின் பாதிப்பு பெருமளவு யாருக்கும் தெரியவில்லை. எனவே அவர்களுக்கு அரசு அதிகாரிகள் மற்றும் தமிழக மக்கள் உதவி செய்யுமாறு கூறியுள்ளனர்.
அந்த பகுதியில் விவசாய நிலங்கள் அதிகமாக உள்ளதால் மரங்கள் மற்றும் மின் கம்பங்கள் சாய்ந்துள்ளன. இருப்பினும் தங்குவதற்கு எந்த ஒரு ஏற்பாடும் செய்யாததால் தங்களது உறவினர் வீட்டிற்கு தஞ்சமடைந்துள்ளனர். கடவூர் சுற்றியுள்ள தென்னை மரம் மற்றும் மாமரங்கள் சாய்ந்துள்ளன. அப்பகுதி மக்களே அதனை சரி செய்து வருகின்றனர்.
