Tamil Cinema News | சினிமா செய்திகள்
கமலிடம் தன் காதலை ஒத்துகிட்ட கேபி.. உறைந்துபோன கோ-கன்டஸ்டன்ட்ஸ்!
சின்னத்திரையில் ஒரு கலக்கு கலக்கி கொண்டிருக்கும் நிகழ்ச்சிதான் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி கொண்டிருக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சி. இந்தநிலையில் தினசரி புதுப்புது கண்டண்டுக்களை வாரி வாரி கொடுத்து நெட்டிசன்களுக்கும் மக்களுக்கும் பெரும் தீனியாக அமைகிறது இந்த பிக் பாஸ் சீசன் 4.
அந்த வகையில் தற்போது கமலிடமே ‘எனக்கு அவரை பிடிச்சிருக்கு’ என்று கேபி கூறியிருப்பது மற்ற கன்டஸ்டன்ட்களை உறைய வைத்துள்ளது. அதாவது பிக்பாஸில் இந்த சீசன் தொடங்கியது முதலே இதுவரை காதல் ட்ராக் எதுவும் ஓபன் செய்யப்படவில்லை. ஏனென்றால் என்னதான் விஜய் டிவி டிசைன் டிசைனாக புரோமோக்களை வெளியிட்டு பாலாஜி- கேபி ஜோடியை கோத்துவிட நினைச்சாலும் இதுவரை அவ்வாறு எதுவும் நடக்கவில்லை.

gabrilla
மேலும் கேபி பாலாஜியை சுத்தி சுத்தி வந்தாலும் அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காமல் பாலாஜி வந்த வேலையைப் பாத்துக்கிட்டு பிக் பாஸ் வீட்டில் கெத்தா இருக்காரு.
இந்த நிலையில் தற்போது கொம்பையும் கிரீடத்தையும் கொடுத்து கன்டஸ்டன்ட் அனைவருக்கும் பிடித்தவருக்கு கிரீடத்தையும், பிடிக்காதவருக்கு கொம்பையும் கொடுக்குமாறு டாஸ்க்கை கொடுத்தார் கமல்.
இந்த டாஸ்க்கில் கேபியோ பாலாஜிக்கு கிரீடத்தை கொடுத்து ‘இவரை எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.. அதனாலதான் இந்த கிரீடத்தை கொடுக்கிறேன்’ எனக் கூறினார். இதையடுத்து கமலோ ‘பிடிச்சிருக்கா அப்போ சொல்லிருங்க’ என்று கூற அதற்கு கேபியோ பயங்கரமாக வெட்கத்தை வெளிப்படுத்தியிருக்கிறார்.
மேலும் இதைப் பார்த்த பிக்பாஸ் ரசிகர்கள், ‘விஜய் டிவி புரோமோவால சாதிக்க முடியாததை கமல் சார வச்சு செய்ய நினைக்கிறாங்க போல’ என்று விஜய் டிவியின் எண்ண ஓட்டத்தை பிரதிபலித்து சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர்.
