Tamil Cinema News | சினிமா செய்திகள்
வைக்க கூடாத இடத்தில கைவச்ச கேப்ரியலா.. ஷாக்கான ஆஜித்.. என்னடா நடக்குது அங்க!
பிக் பாஸ் சீசன் 4 நிகழ்ச்சியானது விஜய் டிவியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கிறது.
இந்த சூழலில் செவ்வாய்க்கிழமை நடந்த போட்டியில் வெற்றி பெற்ற ஆஜித்துக்கு ஃப்ரீ பாஸ் என்ற டிக்கெட் கிடைத்தது.
இதன்மூலம் பிக்பாஸ் நிகழ்ச்சி தொடங்கிய 10 வாரங்களுக்குள், எப்பயாவது ஆஜித் பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறும் சூழ்நிலை வந்தால் இந்த டிக்கெட்டை வைத்து எஸ்கேப் ஆகி விடலாம்.
ஆனால் இதில் தான் பிக்பாஸ் ஒரு டுவிஸ்ட் வைத்துள்ளார். அது என்னவென்றால் யாரேனும் இந்த டிக்கெட்டை திருடிவிட்டால் ஆஜித்துக்கு அந்த அட்வான்டேஜ் கிடைக்காது.
ஆகையால் ஆஜித் தந்திரமாய் டிக்கெட்டை டவுசரில் மறைச்சு வச்சிட்டாரு, இதை தெரிஞ்சுகிட்ட கேப்ரியலா ஆஜித்தின் டவுசரில் இருக்கும் டிக்கெட்டை எடுப்பது போன்றும் அதனை ஆஜித் தடுப்பது போன்ற விளையாட்டு அரங்கேறியுள்ளது.
மேலும், கேப்ரியலாவிற்க்கு அடுத்தபடியாக அனிதாவும் ஆஜித்திடம், “ஒரு வேளை குளிக்க போறப்ப அல்லது பாத்ரூம் போறப்ப என்ன பண்ணுவ?” என்று கிண்டலுடன் கேட்டபோது, ‘நான் அதையே சோப்பா பயன்படுத்தி விடுவேன், என்று ரிவிட் அடித்தார் ஆஜித்.
இப்படி ‘வேலியில் போற ஓணான்ன புடிச்சு வேட்டியில் விட்ட கதையா!’ ஒரே ஒரு டிக்கெட்டை வச்சுகிட்டு, அல்லோலப்படுகிறார் சூப்பர் சிங்கர் வெற்றியாளர் ஆஜித்.

gabrilla-3-movie-fame
