நாய்க்கு பர்த் டே கொண்டாடிய பிக்பாஸ் பிரபலம்.. கண்டமேனிக்கு திட்டி தீர்க்கும் ரசிகர்கள்

விஜய் டிவியில் ஒளிபரப்பான ஜோடி நம்பர் 1 ஜூனியர் என்ற சீசன் மூலம் ரசிகர்களிடம் அறிமுகமானார் கேப்ரியலா. அதன் பிறகு தனுஷ் நடிப்பில் வெளியான 3  திரைப்படத்தில் சுருதிஹாசனுக்கு தங்கச்சியாக  நடித்தார்.

என்னதான் ஒரு சில படங்களில் நடித்தாலும் பெரிய படங்களில் நடிப்பதற்கான வாய்ப்பு கிடைக்காமல் இருந்ததால் பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சி மூலம் இவர் எதிர்பார்த்தபடியே ஓரளவிற்கு ரசிகர்களிடம் பிரபலமானார்.

எல்லாரும் வெற்றியை மட்டுமே பார்த்துக் கொண்டிருந்த நேரத்தில் கேப்ரில்லா அதைப்பற்றி எல்லாம் கவலைப்படாமல் பிக்பாஸில் 90 நாட்கள் இருந்துவிட்டு இறுதியாக வெற்றி பெற முடியாது என்பதை அறிந்தவுடன் 5 லட்சம் ரூபாய் பணத்தை வாங்கிவிட்டு பிக்பாஸ் வீட்டை விட்டு வெளியேறினார்.

gabriella charlton
gabriella charlton

சமூக வலைதளத்தில் ஆக்டிவாக இருக்கும் கேப்ரியலா. அவ்வப்போது ஏதாவது புகைப்படங்களை வெளியிடுவது மற்றும் நடனமாடிய வீடியோ வெளியிடுவது போன்ற சேட்டைகளை செய்து வருகிறார். அதற்கு பல ரசிகர்களும் பல்வேறு விதமாக கேலியும் கிண்டலும் செய்தனர்.

அதன் பிறகு அமைதியாக ஒரு சில நாட்கள் இருந்த கேப்ரில்லா தற்போது மீண்டும் தனது கைவரிசையை காட்டி உள்ளார். அதாவது மீண்டும் தனது சேட்டையை ஆரம்பித்து விட்டார். இவர் இன்ஸ்டாகிராமில் தனது செல்ல நாய்க்கு பிறந்தநாள் கொண்டாடி உள்ளதாக பதிவிட்டு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

அதனை பார்த்த ஒரு சில ரசிகர்கள் அவன் அவன் சாப்பாட்டுக்கே வழியில்லாம இருக்காங்க இப்ப இந்த நாய்க்கு பர்த்டே ரொம்ப முக்கியமா என கேட்டுள்ளார். மற்றொரு ரசிகர் இது ரொம்ப முக்கியம் என காரசாரமாக திட்டியுள்ளார்.

நீங்கள் பர்த்டே கொண்டாடியது தவறில்லை ஆனால் இப்படி இக்கட்டான சூழ்நிலையில் இதற்கு முக்கியம் காட்டுவது தவறு என ஒரு சில ரசிகர்கள் கூறியுள்ளனர்.

- Advertisement -spot_img

Trending News