Connect with us
Cinemapettai

Cinemapettai

gv praksh

Tamil Cinema News | சினிமா செய்திகள்

ஹாலிவுட் செல்லும் ஜி.வி.பிரகாஷ்..

தமிழ் சினிமாவில் “வெயில்” படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகி, “டார்லிங்” என்ற படத்தின் மூலம் ஹீரோவாகவும் கால் பதித்தவர் நடிகர், இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ். தற்போது பிஸியான நாயகனாக வலம் வந்து கொண்டிருக்கிறார். சமீபத்தில் இவரது நடிப்பில் வெளியான “சிகப்பு மஞ்சள் பச்சை” படம் பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

இதனை தொடர்ந்து “100% காதல், அடங்காதே, ஜெயில்” ஆகிய படங்கள் வரிசையாக ரிலீஸுக்கு காத்திருக்கின்றன. “பேச்சுலர், ஆயிரம் ஜென்மங்கள்” போன்ற படங்கள் படப்பிடிப்பில் உள்ளன. நடிப்பது மட்டுமல்லாது தனுஷ் நடிக்கும் “அசுரன்”மற்றும் சூர்யா நடிக்கும் “சூரரைப்போற்று”ஆகிய படங்களுக்கும் இசையமைத்து வருகிறார்.

இந்நிலையில் ஜி.வி. பிரகாஷ் தனது ட்விட்டர் பக்கத்தில் ஹாலிவுட் படமொன்றில் நடிக்க இருப்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். பிரபல பாலிவுட் இயக்குனர் ரிக்கி ப்ரூச்சல் இயக்கும் இப்படத்தை கேவிபி எனும் ஹாலிவுட் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.

பிரபல ஹாலிவுட் நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் மற்றும் ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்திற்கு “டிராப்சிட்டி” என்று பெயரிடப்பட்டுள்ளது. டுவிட்டர் பதிவில் இருவரும் ஒன்றாக இருக்குமாறு பாடிக்கொண்டே அறிவிப்பை வெளியிட்டுள்ளனர்.

வளச்சு வளச்சு “லிப் கிஸ்” அடிக்கும்போது தெரியும் இவர் ஹாலிவுட்டுக்கு தகுதியானவர்னு.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top