Connect with us

Cinemapettai

மூடர் கூடம் நவீன் vs திரௌபதி மோகன்.. ட்விட்டரில் சலசலப்பு! வாய்திறப்பாரா பா ரஞ்சித்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

மூடர் கூடம் நவீன் vs திரௌபதி மோகன்.. ட்விட்டரில் சலசலப்பு! வாய்திறப்பாரா பா ரஞ்சித்

பழைய வண்ணாரப்பேட்டை படத்தை இயக்கிய ஜி. மோகன் இயக்கியுள்ள படம் ‘திரௌபதி’. ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருனாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இத்திரைப்படம் நாடகக் காதல்களை தோலுரிக்கும் என்ற வகையில் வெளியான ட்ரைலர் சுமார் 4 மில்லியன் வியூஸ் கடந்துள்ளது யூ ட்யூபில்.

இது ஒருபுறம் தான், மறுபக்கத்தில் பா ரஞ்சித் தீண்டாமை, சாதி வேறுபாடு என்பதனை தான் இயக்கும், தயாரிக்கும் படங்களில்  காமித்தும் வருகிறார். சினிமா என்ற ஊடகம் வாயிலாக மக்கள் மனதில் கருத்தை பதிய வைப்பது இவரின் நோக்கம்.

இயக்குனர் ஜி மோகன் முன்பே கூட ட்விட்டரில் இயக்குனர் ரஞ்சித்திடம்  கேள்வி கேட்டு டாக் செய்தார்.

எனினும் திரௌபதி ட்ரைலர் வெளியானதும் குறிப்பிட்ட சமூகம் தங்கள் வாழ்வில் செட்டில் ஆக போலியாக காதலிப்பதாக சித்தரிக்கப்பட்டுள்ளது. ஒருபுறம் பெருகும் ஆதரவு, மறுபுறமோ இது என்ன பாஸ் எப்படி என இருவேறு கருத்துக்கள் நிலவுகிறது.

இந்நிலையில் ரசிகர் ஒருவர் மூடர் கூடம் புகழ் நவீனிடம் இப்படம் பற்றி உங்கள் கருத்து என கேட்டார். அதற்கு நவீன் இப்படத்தை குப்பை என கூறினார்.

இதற்கு தான் மோகன் தோழர் என்பதனை கிண்டலாக டோலர் எனவும், உங்கள் எண்ணம் போலவே தான் அமையும் என்றும் கூறியுள்ளார்.

tweet

விரைவில் இவர்களை வைத்து எதோ ஒரு டிவி சானல் டாக் ஷோ நடத்தப்போவது மட்டும் உறுதி மக்களே. வாய்ப்பு கிடைத்தால் நாங்களே கூட எங்க யூ ட்யூப் சானலில் நடத்துவோம்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top