அட்டகத்தி முதல் லப்பர் பந்து வரை தினேஷின் வெற்றி படங்கள்.. 6 கேரக்டரை நச்சென்று கொடுத்த பாண்டி

Attakathi Dinesh Best Movies: எத்தனையோ திறமையுள்ள ஆர்டிஸ்ட்களுக்கு வெள்ளித்திரைகள் தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பதில்லை. அப்படி ஒருவர் தான் நடிகர் அட்டக்கத்தி தினேஷ். இவருடைய நடிப்புக்கு எந்தவித குறையும் சொல்ல முடியாது என்று சொல்வதற்கு ஏற்ப கதைக்கு ஏற்ற மாதிரி நடிப்பை கொடுக்கக்கூடிய திறமையான ஒரு ஆர்டிஸ்ட். ஆனால் அப்படிப்பட்ட இவருக்கு தொடர்ந்து வாய்ப்புகள் கிடைப்பது கம்மியாகிவிட்டது.

ஆனால் மறுபடியும் இவரை நிரூபிக்கும் விதமாக தற்போது லப்பர் பந்து என்ற படத்தின் மூலம் மக்களிடம் இருந்து பாராட்டுகளை பெற்றிருக்கிறார். இதுவரை இவர் நடித்த படங்களிலே இவருடைய நடிப்புக்கு மக்களிடமிருந்து கிடைத்த பாராட்டின்படி எந்தெந்த படங்கள் வெற்றி பெற்று இருக்கிறது என்பதை பார்க்கலாம்.

சிறந்த நடிப்பை கொடுக்கும் அட்டக்கத்தி தினேஷின் வெற்றி படங்கள்

அட்டகத்தி: பா ரஞ்சித் இயக்கத்தில் முதல்முறையாக தினேஷ் ஹீரோவாக நடித்த படம் தான் அட்டகத்தி. இப்படம் முழுக்க முழுக்க பொழுதுபோக்கு படமாக இருந்தாலும் சிறந்த கதை மற்றும் நல்ல நடிகர் என்ற பாராட்டு பெருமளவிற்கு மக்களிடம் மிகப்பெரிய வரவேற்பு பெற்றது.

குக்கூ: ராஜூமுருகன் இயக்கத்தில் 2014 ஆம் ஆண்டு தினேஷ் மற்றும் மாளவிகா நாயர் நடிப்பில் குக்கூ படம் வெளிவந்தது. பார்வையற்ற ஜோடியாக நடித்த இவர்கள் இருவருடைய நடிப்பும் பார்ப்பவர்களை அதிகளவில் கவர்ந்து மக்களிடமிருந்து நல்ல விமர்சனங்களை பெற்று விமர்சன ரீதியாகவும் வணிக ரீதியாகவும் வெற்றி பெற்றுவிட்டது.

விசாரணை: வெற்றிமாறன் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு அட்டகத்தி தினேஷ், முருகதாஸ், சமுத்திரக்கனி மற்றும் பலர் நடிப்பில் விசாரணை திரைப்படம் வெளிவந்தது. அதிகார வர்க்கத்தின் அடையாளமாக இருக்கும் காவல்துறையின் மனசாட்சியை குறுக்கு விசாரணை செய்யும் தமிழ் சினிமாவின் பெருமித படைப்பாக இப்படம் நின்னு பேசும் அளவிற்கு வெற்றி பெற்றிருக்கிறது.

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு: அதியன் அதிரை இயக்கத்தில் 2019 ஆம் ஆண்டு தினேஷ் மற்றும் ஆனந்தி நடிப்பில் இப்படம் வெளிவந்தது. பல வருடங்களாக மனித இனத்தில் சந்திக்கும் ஒரு விஷயம் என்னவென்றால் அது போர். இது இரண்டு நாடுகளுக்கு நடப்பது மட்டுமில்லாமல் பூமியில் பாதிப்புகளை ஏற்படுத்தும் அளவிற்கு பிரச்சனையே உண்டாக்கும். அப்படி இரண்டாம் உலகப் போரில் மிச்சம் ஒன்று இன்றைய தமிழகத்தில் என்ன பாதிப்பை ஏற்படுத்துகிறது என்பதை தான் இப்படத்தில் கதையாக இருக்கிறது.

j பேபி: சுரேஷ் மாரி இயக்கத்தில் இந்த ஆண்டு ஊர்வசி, அட்டகத்தி தினேஷ், லொள்ளு சபா மாறன் நடிப்பில் j பேபி திரைப்படம் வெளிவந்தது. ஐந்து பிள்ளைகளைப் பெற்று அவர்களை அரும்பாடு பட்டு ஆளாக்கி முடித்த வெளியில் கணவரின் இழப்பை சந்திக்கும் ஒரு பெண் அவரது இரண்டாம் பாதியில் வரும் பிரச்சனைகளை எதிர்கொள்ளும் விதமாகவும் பிள்ளைகளின் அலைக்கழிததால் ஏற்படும் கஷ்டங்களையும் காட்டும் விதமாக இப்படம் பார்ப்பவர்களின் கண்ணீரில் கண்ணீர் வரவைத்தது.

லப்பர் பந்து: தமிழரசன் இயக்கத்தில் இரு தினங்களுக்கு முன் லப்பர் பந்து திரைப்படம் வெளிவந்தது. இதில் ஹரிஷ் கல்யாண் மற்றும் அட்டக்கத்தி தினேஷ், சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள். 40 வயதிலும் வெறித்தனமாக கிரிக்கெட் விளையாடுவதும் அதில் ஒரு காதல் உணர்வை கொண்டு வந்து அதன் மூலம் வரும் பிரச்சனைகளை சமாளிக்கும் விதமாக இப்படம் மக்களிடம் வெற்றி பெற்று வருகிறது.

- Advertisement -spot_img

Trending News