பெண்ணை யானையாகவும், ஆண்களை பாகனாகவும் பார்க்கும் உலகம்.! இணையத்தை தெறிக்க விடும் பிரண்ட்ஷிப் பட டிரைலர்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சி பல பிரபலங்களுக்கு பல வாய்ப்புகளை தந்துள்ளது. அந்த வகையில் பிக் பாஸ் சீசன் 3 இல் பங்குபெற்ற லாஸ்லியாக்கும் தற்போது புதிய வாய்ப்பு வந்துள்ளது.

பிக் பாஸ் 3 என்பது அனைவராலும் விரும்பப்பட்ட அவர் லாஸ்லியா அந்த நிகழ்ச்சிக்கு பிறகு ஒரு சில விளம்பரங்களில் நடித்தார் அதைத் தொடர்ந்து தற்போது புதிதாக திரைப்படம் ஒன்றில் நடிக்கிறார்.

முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவரான ஹர்பஜன் சிங்குடன் இணைந்து நடிக்கிறார் லாஸ்லியா. இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரான ஹர்பஜன் சிங் 1998 ஆம் ஆண்டு முதல் இந்திய அணிக்காக விளையாட தொடங்கியவர். இவர் பஜ்ஜி என்று அழைக்கப்படுபவர்.

தற்போது தமிழ் சினிமாவில் முதன்முறையாக ஹீரோவாக நடிக்கிறார். நட்பு என்ற திரைப்படத்தில் ஹர்பஜன்சிங், லாஸ்லியா ,சதீஷ் ,ஆக்சன் கிங் அர்ஜுன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

இத்திரைப்படத்தை சீன்டோவா ஸ்டுடியோஸ் மற்றும் சினிமாஸ் தயாரித்துள்ளது .நட்பு படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு டிரைலரை நடிகர் ஆர்யா அவர்கள் வெளியிட்டார்.

காதல் ஆக்ஷன் மற்றும் நகைச்சுவை கலந்த இரண்டு நிமிட ட்ரைலர் மூலம் படத்தின் கதையை பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது மார்ச்சு மாதம் வெளியான டீசரில் ஹர்பஜன் கைதாகி செல்வது போல காட்சிகள் இருந்தது லாஸ்லியா சதீஷ் ஹர்பஜன் ஆகிய மூவரும் கல்லூரியில் ஒன்றாக படிக்கும் நண்பர்களாக இப்படத்தில் இருக்கிறார்கள். தற்போதைய திரைப்படத்தின் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.