Victim_cinemapettai

கன்னட நடிகை ஒருவரை ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர் அவரது நண்பர்கள் இருவர்.

கன்னட நடிகை ஒருவர் (பெயர் வெளியிட விரும்பவில்லை) ஞாயிற்றுக்கிழமை இரவு தனது நண்பர்கள் சச்சின் மற்றும் பிரவீன் ஆகியோருடன் காரில் வெளியே சென்றுள்ளார். காரை பிரவீன் ஓட்டியுள்ளார். இரவு 7.30 மணி அளவில் பிரவீன் ஹெக்கனஹள்ளி அருகே ஆள் நடமாட்டம் இல்லாத இடத்தில் காரை நிறுத்தியுள்ளார். காரை நிறுத்திவிட்டு பிரவீனும், சச்சினும் வெளியே வந்துள்ளனர்.

விஷயம் தெரியாமல் நடிகை காரை விட்டு வெளியே வந்துள்ளார். உடனே அந்த இருவரும் நடிகையின் கைகளை பிடித்து காரின் பின் சீட்டில் தள்ளினர்.
பிரவீன், சச்சினின் எண்ணத்தை புரிந்து கொண்ட நடிகை அவர்களின் பிடியில் இருந்து தப்பியோடியுள்ளார். மெயின் ரோட்டுக்கு வந்த அவர் கேப் ஒன்றில் ஏறி காவல் நிலையம் சென்றுள்ளார். காவல் நிலையத்தை அடைந்த நடிகை, சச்சின் மற்றும் பிரவீன் ஆகியோர் மீது புகார் கொடுத்துள்ளார்.

நடிகைக்கு கடந்த இரண்டு ஆண்டுகளாக யாரோ ஒருவர் போன் செய்து அசிங்கமாக பேசியதுடன், ஆபாச மெசேஜ்களும் அனுப்பியுள்ளனர். அந்த வேலையை பார்த்தது சச்சின் மற்றும் பிரவீன் தான் என்பது நடிகைக்கு தற்போதுதான் தெரியவந்துள்ளது.