fbpx
Connect with us

Cinemapettai

சாத்தான்குளம் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்.. யார் இவர்கள்? இனிமேலும் இவர்கள் தேவையா?

India | இந்தியா

சாத்தான்குளம் கொலைக்கு உடந்தையாக இருந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ்.. யார் இவர்கள்? இனிமேலும் இவர்கள் தேவையா?

போலீசுக்கே இல்லாத அதிகாரம் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் அடாவடி பண்ணும் இளைஞர்கள் செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது. போலீசுக்கு உதவியாக இருக்க வேண்டுமென்றால் ஒரு சில கான்ஸ்டபிள்களை கண்டிப்பாக வைத்துக் கொள்ளலாம் அல்லது வேறு யாரேனும் காவல்துறை அலுவலகத்தில் இருந்து நியமித்துக் கொள்ளலாம்.

அப்படி இருக்கும் பொழுது பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் இப்படிப்பட்ட சில இளைஞர்களை வளைத்துக்கொண்டு போலீஸ் நடத்திய அராஜகம்தான் அதிகம்.

சாத்தான்குளத்தில் நடைபெற்ற இரட்டை கொலை சம்பவத்தில் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீசை வைத்து மிகவும் கொடூரமாக தாக்கியுள்ளனர். ரத்தம் வடிய வடிய இவர்கள் அடித்த அடியில் இரண்டு உயிர் பறி போயுள்ளது.

இவ்வளவு பெரிய செய்தியாக பரவி பின் தானாக முன்வந்து அனைத்து குற்றங்களையும் சொல்லியிருக்க வேண்டும். ஆனால் இவர்கள் என்னவோ பெரிய போலீஸ் என நினைத்துகொண்டு அடாவடித்தனம் செய்து கொண்டு வண்டியை மடக்கி பிடிப்பது லைசென்சை கேட்பது ஒரு சிலர் லஞ்சம் வேறு வாங்குகிறார்கள் என ட்விட்டரில் பலர் சொல்லி வருகின்றனர்.

யார் முதலில் இவர்களை நியமித்தது? எதற்காக இவர்கள் பொது மக்களை மிரட்டுகிறார்கள்?  இதற்கு கண்டிப்பாக ஒரு முடிவு கட்டவேண்டும். இனிமேலும் இவர்கள் இந்த பிரண்ட்ஸ் ஆப் போலீஸ் என்ற பெயரில் நடமாடுவதை தடுக்கப்பட வேண்டும்.

சினிமாவில் வரும் போலீஸ்காரர்களை பார்த்துவிட்டு இவர்களும் தன்னை பெரிய கமிஷனர் அளவிற்கு நினைத்துக்கொண்டு பொதுமக்களை மிரட்டுகிறார்கள். யார் இவர்களுக்கு இவளோ அதிகாரத்தை கொடுக்கிறார்கள். சாத்தான்குளம் கொலை பற்றி பிரெண்ட்ஸ் ஆப் போலீசில் ஒருவர் பேசிய ஆடியோ வைரலாகி வருகிறது.

Continue Reading
To Top