fbpx
Connect with us

விஜய்யின் ப்ரண்ட்ஸ் பட வாய்ப்பைக் கைநழுவ விட்ட முன்னணி நடிகை- இவங்க மட்டும் நடிச்சிருந்தா

friends-tamil-vijay

Tamil Cinema News | சினிமா செய்திகள்

விஜய்யின் ப்ரண்ட்ஸ் பட வாய்ப்பைக் கைநழுவ விட்ட முன்னணி நடிகை- இவங்க மட்டும் நடிச்சிருந்தா

சித்திக் இயக்கத்தில், தளபதி விஜய் மற்றும் சூர்யா இணைந்து நடித்த மெகா ஹிட் படம் தான் ‘பிரண்ட்ஸ்’. இந்த படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைத்துள்ளார். மேலும் அற்புதமான கதைக்களத்தை கொண்டிருந்த இந்த படம்  2001ஆம் ஆண்டு வெளிவந்து சூப்பர் டூப்பர் ஹிட்டானது.

இந்த படத்தில் விஜய்யுடன் இணைத்து தேவையானி, ரமேஷ் கண்ணா, வடிவேலு, சார்லி, ராதாரவி உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். மேலும் வடிவேலுவின் நேசமணி கேரக்டர் இந்த இப்படத்தில் பெரிதும் பேசப்பட்டது.

இந்த நிலையில் தற்போது ‘பிரண்ட்ஸ்’ படத்தில் முதலில் ஹீரோயினாக தேவயானி தேர்ந்தெடுக்கப்படவில்லை என்று தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கின்றன. அதாவது ஃப்ரெண்ட்ஸ் திரைப்படத்தில் முதன் முதலில் கதாநாயகியாக நடிக்கவிருந்தது நடிகை ஜோதிகா தானாம்.

friends--cast-crew

friends–cast-crew

மேலும் சில தவிர்க்க முடியாத காரணங்களால், ஜோதிகாவால் இந்த படத்தில் நடிக்க முடியாமல் போனதாம். இதனால்தான் தேவயானியை இந்த படத்திற்கு ஹீரோயினாக தேர்வு செய்தார்களாம்.

jyothika-speech-cinemapettai

jyothika-speech-cinemapettai

அதேபோல் நடிகை சுவலட்சுமி தான் முதலில் சூர்யாவிற்கு ஜோடியாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தாராம். ஆனால் அவராலும் சில காரணங்களால் இந்தப் படத்தில் நடிக்க முடியவில்லை என்ற தகவலும் பரவலாக பேசப்படுகிறது.

மேலும் இந்தச் செய்தியை அறிந்த ரசிகர்கள், ‘வட போச்சே’ என்றும், ‘ஜோதிகா நல்ல சான்ஸ மிஸ் பண்ணிட்டாங்க’ என்றும் தங்களது கருத்துக்களை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.

Continue Reading
To Top