Tamil Cinema News | சினிமா செய்திகள்
தோழரும் இவரே.. இன்ஸ்பிரேஷனும் இவரே.. யாரை சொல்கிறார் கீர்த்தி சுரேஷ்

அப்பாவியான முகம், வாயைத் திறக்காமலேயே பேசும் அந்த ஸ்டைல், நான்கு நாள்கள் ஷேவ் பண்ணாத தாடி ஆகியவை தான் விஜயின் ஸ்டைல். ஆனால், பல சாக்லேட் பாய்கள் கோலிவுட்டில் இருந்தாலும் விஜயை காண ரசிகைகள் இன்னும் போட்டி போட்டு கொண்டு தான் இருக்கிறார்கள். ஏன் விஜயிற்கு மட்டும் இன்னும் இந்த வரவேற்பு குறையாமல் இருக்கிறது? நடிப்பு மட்டுமல்லா அவரிடம் ஒரு கம்ப்ளீட் பேக்கேஜ்களை வைத்து இருக்கிறார். காமெடி, நடனம், ஆக்ஷன் என ஒவ்வொரு விதத்திலும் மாஸ் காட்டி விடுவார்.
எல்லாம் ஓகே. ஆனால், தன் படங்களில் நடிப்பிற்கு எப்போதுமே ரிஸ்க் எடுக்க மாட்டார் என்னும் குற்றச்சாட்டு பல நாட்களாக நிலவி வருகிறது. தமிழ் சினிமா தயாரிப்பாளர்களுக்கும் விநியோஸ்தர்களுக்கும் லாபம் ஈட்டித் தரும் நடிகர்களில் விஜய் முக்கியமானவர். எல்லா படத்திலும் பாக்ஸ் ஆபீஸ் அடிப்பதை வழக்கமாக கொண்டு இருக்கிறார். இதனால், திரையில் முற்றிலும் வேறொரு விஜய்யைப் பார்க்க திரையுலகமே முதலில் தயாராக இல்லை. முற்றிலும் புதிதான, சவாலான கதாபாத்திரங்களில் நடிக்க விஜய் தயங்குவதற்கான காரணம் இதுதான். ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் சினிமா வளர்ச்சிக்கும் பெரிய பங்காற்றுவதால் விஜய் மீது பலருக்கும் தனி பிரியம் உண்டு.
விஜயின் பிறந்தநாளுக்கு ரசிகர்களை போல பிரபலங்களும் தங்கள் வாழ்த்துக்களை நேற்று தெரிவித்தனர். இந்நிலையில், விஜயின் பைரவா மற்றும் சர்கார் படத்தில் ஜோடியாக நடிக்கும் கீர்த்தி சுரேஷ் தனது ட்விட்டரில் வாழ்த்து பதிவை வெளியிட்டு இருக்கிறார். அப்பதிவில், உங்களை நான் நடிகராக மட்டும் பார்க்கவில்லை. சக நடிகர், நல விரும்பி, நண்பன் மற்றும் என் இன்ஸ்பிரேஷனாக எப்போதும் மதிக்கிறேன் எனத் தெரிவித்து இருக்கிறார். அப்பதிவு ரசிகர்களிடம் வைரல் ஹிட்டாகி வருகிறது. கடந்த வருடம் ஒரு ஓவியத்தை கொடுத்த கீர்த்தி இந்த வருடம் தங்கள் இருவரும் இணையும் சர்கார் போஸ்டருடன் வாழ்த்தை தெரிவித்து இருப்பது குறிப்பிடத்தக்கது.
