India | இந்தியா
கூடவே இருந்தியே செவ்வாழ இப்படி அடிச்சிட்டியே.. நகைக்கடையில் 75 லட்சம் கொள்ளை
Published on
நந்தா ராஜேஷ் டி.என்.என் என்ற பெயரில் நகைக் கடை ஒன்றை கரூரில் நடத்தி வந்துள்ளார். இவரது கடைக்கு கடந்த பத்து வருடங்களாக வட மாநிலத்தைச் சேர்ந்த தீபக் மிட்டல் என்பவர் நகை வினியோகம் செய்து வந்துள்ளதாக தகவல்கள் தெரிகிறது.
இந்நிலையில் 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள 3 கிலோ தங்க கட்டிகள் வாங்கிச் சென்றுள்ளார். சில நாட்களாக அவரை பற்றி தகவல் எதுவும் தெரியாததால் அவர் தலைமறைவாகி இருக்கலாம் என கருதப்படுகிறது. அதனால் கடை உரிமையாளரான நந்தா ராஜேஷ் என்பவர் கரூர் போலீசாரிடம் இத்தகவலை தெரிவித்துள்ளார்.
இச்சம்பவம் அப்பகுதி மக்களுக்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தீபக் மெட்டல் என்பவர் வட மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். அவரைத் தேடித் தருமாறு கரூர் குற்றப்பிரிவு போலீசாரிடம் தனிப்படை அமைத்து தேடி தருமாறு கூறியுள்ளார்.
