Tamil Cinema News | சினிமா செய்திகள்
வெள்ளிக்கிழமை அதுமா! உன் முகத்துல தான் முழிச்சுருக்கேன்.. ஜுலியால் அதிரும் நெட்டிசன்கள்
வெள்ளிக்கிழமை அதுமா! உன் முகத்துல தான் முழிச்சுருக்கேன்.. ஜுலியால் அதிரும் நெட்டிசன்கள்.
காலையிலேயே டிவிட்டரில் உன் முகத்துல தான் முச்சிருக்கேன். என்ன நடக்குமோ என ஜுலியை நெட்டிசன்கள் கலாய்த்துள்ளனர்.
ஜல்லிக்கட்டு போராட்த்தில் பிரபலம் ஆனவர் ஜுலி. இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற போது இவரது உண்மையான குணம் தெரிந்ததால் இவரை பலரும் கடுமையாக வசைபாடினர். அந்த நிகழ்ச்சியில் பங்கேற்று தனக்கு இருந்த நல்ல பெயரை ஜுலி கெடுத்துக்கொண்டார்.
எனினும் அதன்பிறகு அவருக்கு குணச்சித்திர வேடங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. பிரபல தொலைக்காட்சியில் தொகுப்பாளினி பணியும் கிடைத்தது. தற்போது ஓரளவு அவருக்கு நன்றாக போய்க்கொண்டிருக்கிறது.
ஜுலி தனது டுவிட்டர் பக்கத்தில் நன்றாக சிந்தித்துப்பார் இந்த உலகில் அதிகமாக தோற்றவர்கள் தான் வரலாற்றில் இடம்பிடிக்கின்றனர்..ஆகையால் தோற்பதை கண்டு அஞ்சாதே இவ்வுலகில் எதுவும் நிரந்தரமில்லை, காலை வணக்கம் என்று இன்று பதிவிட்டுள்ளார்.
இந்த டுவிட்டை பார்த்த ரசிகர்கள் காலையிலேயே தூங்கி எழுந்ததும் உங்கள் முகத்தில்தான் முழித்திருக்கிறோம், என்ன நடந்தாலும் நீங்கள்தான் பொறுப்பு என தெரிவித்து வருகின்றனர்.
அதற்கு பதிலடி கொடுத்துள்ள ஒருவர் அடுத்தவ குடிய எப்படி கெடுக்கலாம்னு திரிறானுங்க..அவனுங்களுக்கு மட்டும்தா bro தப்பா இருக்கும் உங்களுக்கு சரியா இருக்கும்னு தா எனக்கு தோணுது…என்னனு பாத்துட்டு nit சொல்லுங்க என பதிவிட்டுள்ளார்.
