Tamil Nadu | தமிழ் நாடு
இலவச கொரோனா தடுப்பூசி.. தமிழக முதல்வரின் அதிரடி அறிவிப்பால் மகிழ்ச்சியில் திளைக்கும் மக்கள்
தமிழகத்தில் கடந்த 6 மாதத்துக்கு மேலாக நிலவி வரும் கொரோனா நோய்த்தொற்று பரவலால் அச்சத்தில் நடுங்கிக் கொண்டிருந்த பாமரமக்கள் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக தங்களது இயல்புநிலைக்கு திரும்பிக் கொண்டிருக்கின்றனர்.
இந்த சூழலில் தமிழக முதல்வர் எடப்பாடி கே. பழனிச்சாமி அவர்கள் தற்போது மக்களுக்கு மகிழ்ச்சியான அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் “கொரோனா வைரஸ் குணமடைவதற்காக தடுப்பூசி கண்டுபிடித்தவுடன், தமிழகத்தில் உள்ள அனைத்து மக்களுக்கும் இலவசமாக அரசாங்கத்தின் செலவிலேயே தடுப்பூசி போடப்படும்” என்ற மகிழ்ச்சியான செய்தியை தமிழக முதல்வர் அறிவித்துள்ளார்.
மேலும் தமிழக முதல்வரின் இந்த முடிவுக்கு அரசியல் பிரமுகர்கள் தொடங்கி திரைப் பிரபலங்கள், பொதுமக்கள் வரை பலரும் தங்கள் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.
எனவே கூடிய விரைவில், கொரோனாவிற்கான தடுப்பு மருந்து கண்டுபிடித்தவுடன் அதனை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரவேண்டும் என்ற உறுதியுடன் பல்வேறு முயற்சிகளை தமிழக அரசு மேற்கொள்கிறது.
அதற்கேற்ப, எடப்பாடியார் தற்போது அறிவித்துள்ள கொரோனா இலவச தடுப்பூசி திட்டத்தால் மக்களிடையே கொரோனா வைரஸ் பற்றிய அச்சம் நீங்கி, புது நம்பிக்கை பிறந்துள்ளது.

edapaddi-k-palaniswami
