Connect with us

Cinemapettai

Indian-cricket-team

Sports | விளையாட்டு

இந்திய அணியில் நான்காம் இடத்தில் விளையாட இவர்தான் சரியான வீரர்.. பிசிசிஐ அதிரடி

2019 உலக கோப்பை போட்டிக்காக கடந்த இரண்டு வருடங்களாக இந்திய அணி வீரர்களை டெஸ்ட் செய்தார்கள், ஏனென்றால் இந்திய அணியில் பலவீனம் என்றால் மிடில் ஆர்டர் தான், இந்த மிடில் ஆர்டர்கே சரியான வீரர் இல்லை என்பதற்காகதான் கடந்த இரண்டு ஆண்டுகளாக போட்டியின் போது வீரர்களை பரிசோதனை செய்தார்கள்.

இந்திய அணியில் நான்காவது வரிசையில் பூர்த்தி செய்ய ரகானே, ஸ்ரேயாஸ் அய்யர், ரெய்னா, மனிஷ் பாண்டே, அம்பத்தி ராயுடு, என பல வீரர்களை பரிசோதித்தார்கள். அதில் அம்பத்தி ராயுடு தான் தேர்வு செய்யப்பட்டார், அதேபோல் வெஸ்ட்இண்டீஸ் தொடருக்கு பின்னர் நான்காவது வரிசை வீரர் இவர்தான் என விராத் கோலியும் தெரிவித்தார்.

ஆனால் உலக கோப்பை போட்டியில் அம்பத்தி ராயுடு பதிலாக விஜய்சங்கர் சேர்க்கப்பட்டார், உலக கோப்பை போட்டியில் மாற்று வீரர் பெயர் பட்டியலில் அம்பத்தி ராயுடு பெயர் இருந்தும், சில வீரர்களுக்கு அடிபட்ட நிலையிலும் அம்பத்தி ராயுடுவை அழைக்கவில்லை. நான்காம் வரிசையில் விஜய் சங்கர், rishabh pant இருந்தும் சரியாக விளையாடவில்லை என்று தான் கூற வேண்டும், அதுதான் இந்தியாவின் பலவீனம்.

உலகக் கோப்பை போட்டியின் அரையிறுதியில் இந்தியா தோற்றது ,அதன் பிறகு மீண்டும் நான்காம் வரிசை வீரர் யார் என்ற விவாதம் மீண்டும் தொடங்கியுள்ளது. இந்த நிலையில் நான்காம் வரிசையில் ரஹானவை ஆட வைக்க வேண்டும் என பிசிசிஐ அதிகாரி சஞ்சய் ஜாக்தாலே தெரிவித்துள்ளார். இந்த கருத்தையே சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

To Top