சினிமா நடிகைகளுக்கு நாளுக்கு நாள் மார்கெட் ஏறிக்கொண்டே போகிறது அப்படிதான் இந்த நடிகைக்கும் ஜெய ஜானகி நாயகா படத்தில் 4 காட்சிகளில் நடிக்க வாணி விஸ்வநாத்திற்கு ரூ. 40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது.

பொயப்பட்டி சீனு இயக்கிய ஜெய ஜானகி நாயகா தெலுங்கு படம் கடந்த வெள்ளிக்கிழமை ரிலீஸானது. பெல்லம்கொண்டா ஸ்ரீனிவாஸ் ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தில் ரகுல் ப்ரீத் சிங் ஹீரோயினாக நடித்துள்ளார்.

பெரிய தொகையை வாங்கிக் கொண்டு கேத்ரீன் தெரஸா ஒரு பாடலுக்கு குத்தாட்டம் போட்டுள்ளார். இந்த படத்தில் வாணி விஸ்வநாத் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

நான்கு காட்சிகளில் நடிக்க வாணிக்கு ரூ. 40 லட்சம் சம்பளம் கொடுக்கப்பட்டுள்ளது. அவரது கதாபாத்திரம் மிகவும் முக்கியம் என்பதால் ரூ. 40 லட்சம் அளித்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.
ஜெய ஜானகி நாயகா படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.