Connect with us

Cinemapettai

தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆகும் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்!

Dhanush-Arya

தமிழ் புத்தாண்டில் ரிலீஸ் ஆகும் நான்கு முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள்!

‘பெங்களூர் நாட்கள்’ படத்திற்கு பிறகு ஆர்யா நடித்து ரிலீஸுக்கு வெயிடிங் லிஸ்டில் உள்ள படம் ‘கடம்பன்’. இதுதவிர கைவசம் ‘சங்கமித்ரா, சந்தனத்தேவன்’ ஆகிய 2 படங்கள் இருக்கிறது. இதில் ‘மஞ்சப்பை’ புகழ் ராகவா இயக்கும் ‘கடம்பன்’ படத்தில் ஆர்யாவுக்கு ஜோடியாக கேத்ரின் திரசா நடித்துள்ளார்.

யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இதன் படப்பிடிப்பு முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறதாம். ‘சூப்பர் குட் பிலிம்ஸ்’ நிறுவனம் சார்பில் ஆர்.பி.சௌத்ரி தயாரித்து வரும்‘கடம்பன்’-ஐ ஆர்யா தனது ‘தி ஷோ பீப்பில்’ நிறுவனம் மூலம் ரிலீஸ் செய்யவுள்ளாராம். படத்தின் போஸ்டர்ஸ், டீசர் மற்றும் டிரைலர் சமீபத்தில் ரிலீஸாகி ரசிகர்களிடையே செம லைக்ஸ் குவித்துள்ளது.

தற்போது, படத்தை ஏப்ரல் 14-ஆம் தேதி தமிழ் புத்தாண்டு ஸ்பெஷலாக வெளியிடவுள்ளதாக அதிகாரப்பூர்வமாக ட்விட்டப்பட்டுள்ளது. இதே நாளில், தனுஷின் ‘பவர் பாண்டி’, விஷாலின் ‘துப்பறிவாளன்’, ராகவா லாரன்ஸின் ‘சிவலிங்கா’ ஆகிய மூன்று படங்களும் வெளியாகவிருப்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

அதிகம் படித்தவை

To Top