fbpx
Connect with us

Cinemapettai

வலிமை படத்தில் வேற லெவல் மாஸ் காட்டும் தல அஜித்.. இந்த வாட்டி 4 ஹீரோயின்கள்

Tamil Cinema News | சினிமா செய்திகள்

வலிமை படத்தில் வேற லெவல் மாஸ் காட்டும் தல அஜித்.. இந்த வாட்டி 4 ஹீரோயின்கள்

நேர்கொண்ட பார்வை படத்திற்கு பிறகு தல அஜித் மற்றும் வினோத் ஆகியோர் இணையும் திரைப்படம் வலிமை. இந்த படத்தை நேர்கொண்டபார்வை படத்தை தயாரித்த போனி கபூர் தயாரிக்கிறார். இந்த படத்தில் தல அஜித் போலீஸாக வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. யுவன் சங்கர் ராஜா இசையமைக்கிறார்.

தல அஜித் நடிக்கும் வலிமை படத்தில் நான்கு ஹீரோயின்கள் நடிக்க உள்ளனர். அதில் நயன்தாரா ஏற்கனவே கமிட் ஆகி விட்ட நிலையில், தற்போது நிக்கி கல்ராணி, யாஷிகா மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் போன்றோர் நடிக்க உள்ளனர்.

இந்நிலையில் முக்கிய கதாபாத்திரம் ஒன்றுக்காக அர்ஜுனிடம் பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும், அந்த செய்தி உறுதியானவுடன் இந்த தகவலையும் சேர்த்து வெளியிடலாம் என படக்குழு வெயிட் செய்கிறது.

இன்டர்நேஷனல் தீவிரவாதியை தல அஜித் தலைமையில் மூன்று பெண்களை வைத்துக் கொண்டு எவ்வாறு அவனை பிடிக்கிறார்கள் என்பதே கதை என்றும் கூறுகின்றனர். மேலும் கார் ரேஸ், பைக் ரேஸ் என படம் முழுக்க விறுவிறுப்பான சண்டைக் காட்சிகள் நிறைந்திருக்கும் என படக்குழு தெரிவித்துள்ளது.

தல டக்கரு டோய்.!

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top