கவுண்டமணி நிஜ வாழ்க்கையிலும் புரட்டி எடுத்த 4 நடிகைகள்.. இதுல ஒரு அம்மணிக்கு சொந்த வீடு வேற!

90களில் தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகராக சுமார் 450 படங்களில் நடித்த பிரபலமானவர் நடிகர் கவுண்டமணி. இவர் காமெடி நடிகராக தன்னுடைய சினிமா பயணத்தை துவங்குவதற்கு முன்பே சுமார் 10 படங்களில் கதாநாயகனாகவும், குணச்சித்திர நடிகராகவும், வில்லனாகவும் நடித்திருப்பார். அத்துடன் இவர் செந்திலுடன் சேர்ந்து நடித்த காமெடி காட்சிகளில் இன்று வரை ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்திருக்கிறது.

எனவே கவுண்டமணி தன்னுடன் படங்களில் ஜோடியாக நடித்த கிளாமர் நடிகைகள் நான்கு பேருடன் நெருக்கமான தொடர்பில் இருந்ததாக தற்போது யூட்யூப் விமர்சகரும் நடிகருமான பயில்வான் ரங்கநாதன் பேட்டி ஒன்றில் தெரிவித்திருக்கிறார். 25 வருட திரைப்படம் வாழ்க்கையில் சுமார் 750 படங்களில் காமெடி நடிகையாக நடித்த கோவை சரளா உடன் அதிகமான படங்களில் இணைந்து நடித்தவர் காமெடி நடிகர் கவுண்டமணி.

கரகாட்டக்காரன் உள்ளிட்ட இவர்களது காம்போவில் வெளியாகும் படங்களின் காமெடிகள் அனைத்தும் இன்றும் ரசிகர்களை வயிறு குலுங்க சிரிக்க வைத்துக்கொண்டிருக்கிறது. அதைப்போல் கோவை சரளாவுக்கு நிகராக அதிகம் படங்கள் கவுண்டமணியுடன் இணைந்து நடித்த நடிகை ஷர்மிலிக்கும் கவுண்டமணிக்கும் இடையே நெருங்கிய தொடர்பு இருந்ததாகவும் பயில்வான் தெரிவித்திருக்கிறார்.

நெஞ்சம் உண்டு நேர்மை உண்டு, மாப்பிள்ளை வந்தாச்சு உள்ளிட்ட சுமார் 27 படங்களில் ஷர்மிலி கவுண்டமணியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார். கோவை சரளாவை விட ஷர்மிலி கவுண்டமணியுடன் கிளாமர் காட்சிகளை நடித்துப் பிரபலமானவர். எனவே இவர்கள் இருவரும் இணைந்து நெருக்கமாக கவர்ச்சி தூக்கலாக நடிக்கும் காட்சிகள் அந்தக் காலத்திலேயே பார்ப்பதற்கு கண் கூசும் அளவுக்கு இருக்குமாம்.

மேலும் நம்ம ஊரு பூவாத்தா போன்ற படங்களில் கவுண்டமணியுடன் ஜோடி சேர்ந்து நடித்த நடிகை வாசுகியும் இந்த லிஸ்டில் உள்ளார். வாசுகியும் கவுண்டமணியின் படங்களில் அதிகமாக காணப்படும் நடிகை என்பதால் அவருக்கும் கவுண்டமணிக்கும் யாருக்கும் தெரியாத நெருங்கிய தொடர்பு இருக்கிறதாம்.

அதைப்போல் சேரன் பாண்டியன் போன்ற நான்கு படங்களில் கவுண்டமணிக்கு ஜோடியாக நடித்திருந்த அனுஜா ரெட்டியும் கவுண்டமணியுடன் தொடர்பில் இருந்ததாக சொல்லப்படுகிறது. இவரும் கவுண்டமணியுடன் சேர்ந்து நடிக்கும் போது கவர்ச்சி தூக்கலாக கொஞ்சம் வார்த்தைகளே அதிகம் இருக்கும். இவ்வாறு காமெடி நடிகைகள் கொஞ்சம் கலராக இருந்தால் அவர்களை சாமானியமான கவுண்டமணி விட்டு வைக்க மாட்டார் என கவுண்டமணியை பற்றி யாருக்கும் தெரியாத மறுபக்கத்தை பற்றி பயில்வான் சமீபத்திய பேட்டியில் தெரிவித்திருக்கிறார்.

Next Story

- Advertisement -