சினிமாவில் வாரிவழங்கும் 4 வள்ளல்கள்.. எம்ஜிஆர் வீட்டில் உள்ள அணையாத அடுப்பு

சினிமாவைப் பொருத்தவரை நல்ல நடிகர் என்பதை தாண்டி நல்ல மனிதன் என்ற பெயரை சம்பாதிப்பது ஒரு மிகப் பெரிய விஷயம். மற்றவருக்கு உதவுவதை பார்த்து மகிழ்வதற்கு பெரிய குணம் வேண்டும். இவ்வாறு தமிழ் சினிமாவையே ஆட்சி செய்த 4 பேர் முல்லைக்குத் தேர் கொடுத்த பாரியை போல் யார் எதைக் கேட்டாலும் தானமாகக் கொடுக்க கூடியவர்கள்.

எம் ஜிஆர் : தமிழ் சினிமாவின் ஜாம்பவானான எம்ஜிஆர் தனது நடிப்பின் மூலம் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார். அதைக்காட்டிலும் வாரி வழங்கும் வள்ளல் என்ற பெயர் எம்ஜிஆருக்கு உண்டு. யார் ஒருவர் கஷ்டம் என்று சொன்னாலும் உடனே போய் நிற்கக் கூடியவர் எம்ஜிஆர். இவர் வீட்டுக்கு எப்போது போய் நின்றாலும் சாப்பாடும், பணமும் கிடைக்குமாம். பலரது பசி தீர்ப்பதற்காக எம்ஜிஆர் வீட்டில் எப்போதும் அடுப்பு எரிந்து கொண்டே இருக்குமாம்.

கலைவாணர் என் எஸ் கிருஷ்ணன் : தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகராக அறியப்படுபவர் என் எஸ் கிருஷ்ணன். இவர் இயக்குனராகவும் பாடகராகவும் இருந்துள்ளார். இவருடைய பெயருக்கேற்ப அனைவருக்கும் வாரிக் கொடுக்கும் குணம் உடையவர். யாராவது ஏதேனும் கேட்டால் இல்லை என்ற வார்த்தையை அவர் வாயிலிருந்து வராதாம். இவருடைய நினைவாக சென்னையில் உள்ள அரசு அரங்கத்திற்கு கலைவாணர் அரங்கம் என பெயர் சூட்டியுள்ளது.

மேஜர் சுந்தரராஜன் : தமிழ் சினிமாவின் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றவர் மேஜர் சுந்தர்ராஜன். இவர் கிட்டத்தட்ட 900 மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். இவருடைய வீட்டின் முன் கஷ்டம் என்று வந்தவர்களுக்கு பாக்கெட்டில் உள்ள மொத்த காசையும் எடுத்துக் கொடுக்கும் குணம் கொண்டவராம். மேஜர் சுந்தர்ராஜன் ஒருமுறை ஒருவர் உதவி கேட்டவுடன் எல்லா காசையும் கொடுத்து விட்டு நடந்தே வீட்டிற்குச் சென்றாராம்.

விஜயகாந்த் : தமிழ் சினிமாவை ஆட்சி செய்தவர் கேப்டன் விஜயகாந்த். இவருக்கு தற்போது வரை ஏராளமான ரசிகர்கள் உண்டு. இவருடன் நடித்த சக நடிகர்கள் இவரின் உதவும் மனப்பான்மை பற்றி நிறைய பேட்டிகளில் கூறி உள்ளனர். விஜயகாந்திடம் கஷ்டம் என வந்தன் இருப்பவர்களிடம் தன்னால் முயன்ற எல்லா உதவிகளையும் செய்யக்கூடியவர். விஜயகாந்த் பணம் மட்டும் அல்லாது நிறைய நடிகர்களுக்கு பட வாய்ப்பையும் கொடுத்து உதவியுள்ளார்.

Next Story

- Advertisement -