fbpx
Connect with us

தோண்ட தோண்ட சோழர் சிலைகள் கண்டுபிடிப்பு.. பூமிக்கடியில் புதைந்த தமிழர் வரலாறு

Tamil Nadu | தமிழ் நாடு

தோண்ட தோண்ட சோழர் சிலைகள் கண்டுபிடிப்பு.. பூமிக்கடியில் புதைந்த தமிழர் வரலாறு

சேலம் மாவட்டம் ஆறகழூர் கிராமத்தில் காமநாத ஈஸ்வரர் கோவிலில் சோழர் காலத்து உலோக சிலைகள் மற்றும் தூபக்கரண்டிகள் கிடைத்துள்ளன. இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

12 ஆம் நூற்றாண்டில் ஆறகழூர் தலைநகரமாகக் கொண்டு வாணகோவரையன் என்ற மன்னன் மகத நாட்டை ஆண்டு வந்ததாகவும் இவர் மூன்றாம் குலோத்துங்க சோழ மன்னனின் கீழ் ஆண்ட குறுநில மன்னர் என்றனர். இவர் கட்டிய கோயில்தான் காமநாத ஈஸ்வரர் கோயில் ஆகும்.

chola-statue-1

chola-statue-1

தற்போது இந்தக் கோயிலின் கட்டிட பணிகள் நடந்து வருகின்றன. அப்போது கோயிலின் அடியில் இருந்து மூன்றடி உயரத்தில் பார்வதி சிலை ஒன்றும் இரண்டடி உயரத்தில் பணிப்பெண்கள் கொண்ட இரண்டு சிலைகளும் கிடைத்துள்ளன. மேலும் சாமியின் சிலைக்கு பயன்படுத்தப்பட்ட தூப கரண்டியும் கிடைத்துள்ளன.

இதேபோல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் சிலைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. புதுக்கோட்டை மாவட்டம் பேரையூர் கிராமத்தில் உள்ள முத்தையா என்பவருக்கு சொந்தமான நிலத்தில் மரங்கள் இருந்துள்ளன. அதனை அகற்றும் பணியில் தொழிலாளர்களை வைத்து வெட்டி அகற்றி உள்ளார். அப்போது அதிகமாக பள்ளம் ஏற்பட்டதால் அருகில் உள்ள இடத்தில் சிறிது பள்ளம் தோண்டி அந்த மண்ணை மற்றொரு பள்ளத்தில் போட திட்டமிட்டுள்ளனர்.

chola-statue-2

chola-statue-2

அப்போதுதான் மூன்று அம்மன் சிலைகளும் சிவன் பார்வதி விநாயகர் சிலை உள்ளிட்ட 17 ஐம்பொன் சிலைகளும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இந்த தகவல் அறிந்த கிராமத்தினர் அனைவரும் விரைந்து வந்துள்ளனர். கிராம மக்கள் அனைவரும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் தகவல் கொடுத்துள்ளனர். அதையடுத்து அவர்கள் சிலைகள் அனைத்தையும் திருமயம் கருவூலத்தில் ஒப்படைத்துள்ளனர்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published.

To Top