Tamil Cinema News | சினிமா செய்திகள்
பல கோடி மதிப்புள்ள தங்க பாறைகள் கண்டுபிடிப்பு! அதனை என்ன செய்வார்கள்?
தங்கம், இந்த வார்த்தை கேட்டாலே நம் பெண்களுக்கு அளவுக்கதிகமான ஆசை, கணவர்களுக்கு அளவுக்கதிகமான பயம். ஒரு குண்டூசி தங்கம் கூட பெரிய காசு. திநகர் போனால் அங்கே துணி கடைகளை விட நகைக்கடை ஜாஸ்தி. ஏழை மக்கள் சிறு தங்கம் வாங்க கூட கஷ்டபடுவார்கள் ஆனால் பல அடுக்கு மாடி கடைகளில் உள்ள நகைகளை பார்த்தால் தலையே சுற்றும். அப்பனா அந்த முதலாளிகளுக்கு எவளோ பணம் இருக்கும். அதும் ஒரு தங்க மலையே இருந்தால்?
பல மில்லியன் டாலர்கள் மதிப்புள்ள இரண்டு தங்க பாறைகள் மேற்கு ஆஸ்திரேலியாவில் கண்டெடுக்கப்பட்டுள்ளது. சுரங்கத் தொழில் வல்லுநர்கள் இவை பல மில்லியன் டாலர்கள் மதிப்பு கொண்டவை என்கிறார்கள்.
பாறையில் வெளிபுறத்தில் தங்கம் கொண்ட இந்த இரட்டை பாறைகளில், ஒரு பாறையின் எடை 95 கிலோ மற்றொன்றின் எடை 63 கிலோ.95 கிலோ எடையுள்ள பாறையில் 2400 அவுன்ஸ் அளவுக்கு தங்கம் இருக்கிறது என்கிறது கனடா சுரங்கத் தொழில் நிறுவனமான ஆர்.என்.சி மினரல்ஸ். இதன் மதிப்பு பதினொரு மில்லியன் அமெரிக்க டாலர்கள்.
