Tamil Nadu | தமிழ் நாடு
அமைச்சருக்கு கெட்ட வார்த்தையில் அர்ச்சனை.. பிரசன்னாவின் கோபம்
வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் பழங்குடி இனத்தை சேர்ந்த இரண்டு சிறுவர்களை தனது காலனியை கலட்ட சொன்ன விவகாரம் பெரும் சர்ச்சையை கிளப்பி வைரலாகி வருகிறது.
ஒரு கோவிலுக்குள் செல்வதற்காக குனிந்து காலனியை கலட்ட முடியாததால் சிறுவர்களை வைத்து கலட்ட வைத்துள்ளார். இந்த நிகழ்வு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, அங்கு வேலை பார்ப்பதற்கு அவ்வளவு வேலையாட்கள் இருந்தும் இரண்டும் சிறுவர்களை வைத்து கழட்டச் சொன்னது தவறுதான் என்று விவாதம் அரசியல் வட்டாரத்தில் நடைபெற்று வருகிறது.
இந்த சூழ்நிலையில் நடிகர் பிரசன்னா இந்த வீடியோவை தனது ட்விட்டர் பக்கத்தில் ஷேர் செய்து தனது கருத்தைப் பதிவிட்டுள்ளார். ஆனால் அமைச்சர் கூறியது என்னவென்றால் தன்னுடைய பேரன் என்று நினைத்துதான் இதை செய்தேன் என்று வருத்தம் தெரிவித்துள்ளாராம்.
கோபத்தில் கொந்தளித்த பிரசன்னா வெளியிட்ட பதிவு சமூக வலைதளங்களில் தற்போது வைரலாகி வருகிறது,

prasanna-twit
