ஆஸ்கர் விருது 2017-க்கு சிறந்த வெளிநாட்டு மொழிப் படப் பிரிவில் இந்தியாவிலிருந்து போன ஒரே படம் வெற்றி மாறன் இயக்கிய விசாரணை. போட்டிக்கு வந்த அத்தனை மொழிப் படங்களையும் பின்னுக்குத் தள்ளியது இந்தப் படம்.

இதைப் பார்த்த பல சினிமா ஆர்வலர்களும் விசாரணைக்கு நிச்சயம் ஆஸ்கர் கிடைக்கும் என்றுதான் நம்பினர்.

ஆனால் விருதுக் குழுவின் இறுதிப் பரிந்துரைப் பட்டியலில் விசாரணை இடம் பெறவில்லை.

பரிந்துரைப் பட்டியலில் இடம்பெற்றிருந்த அந்தப் படங்கள் இவைதான்.

1. லேண்ட் ஆஃப் மைன் (LAND OF MINE ) – டென்மார்க் திரைப்படம்

2. எ மேன் கால்டு ஓவ் (A MAN CALLED OVE) – சுவீடன் திரைப்படம்

3. தி சேல்ஸ்மேன் (THE SALESMAN ) – ஈரான் திரைப்படம்

4. டன்னா (TANNA) – ஆஸ்திரேலியத் திரைப்படம்

5.டோனி எர்ட்மேன் (TONY ERDMANN) – ஜெர்மனி திரைப்படம்

இவற்றில் தி சேல்ஸ்மேன் படம்தான் சிறந்த வெளிநாட்டு மொழிப் படத்துக்கான ஆஸ்கர் விருதினை வென்றது.