பெப்ஸி உமா ஒரு காலத்தில் கொடிகட்டி பறந்த தொகுப்பாளினி. இவரை போல் நிகழ்ச்சி தொகுப்பில் பிரபலமானவர்கள் யாரும் கிடையாது. தற்போது இவரை பற்றி சில சுவாரஸ்ய தகவல்களை பார்ப்போம்.

சென்னையில் ஆகஸ்ட் 18ம் தேதி 1974ம் ஆண்டு பிறந்துள்ளார். இவரின் அப்பா ஒரு வக்கீல், அம்மா நடன கலைஞர் மற்றும் ஓவியர், உமா MBA முடித்தவர்.

இவரின் முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சி தூர்தசனில் ஒளிபரப்பான வாருங்கள் வாழ்த்துவோம் என்ற நிகழ்ச்சி தான். இதில் உமா 104 ஷோக்களை தொகுத்து வழங்கியுள்ளார்.தூர்தசனை தொடர்ந்து சன் டிவியில் பணியாற்ற தொடங்கினார்.

uma

அங்கு 10 வருடங்களுக்கு மேல் பணிபுரிந்து வந்திருக்கிறார். சன் டிவியில் Star Show என்ற நிகழ்ச்சியை தயாரித்தும், கங்கை அமரருடன் இணைந்து தொகுத்து வழங்கியும் வந்துள்ளார்.

பின் கலைஞர் டிவி தொடங்கியபோது அத்தொலைக்காட்சியில் வேலைசெய்த இவர் மார்ச் 2008ல் அத்தொலைக்காட்சியில் இருந்து வெளியேறினார்.

ஜெயா டிவியில் ஆல்பம் என்ற நிகழ்ச்சியில் பணியாற்றி வந்தார். தமிழ்நாட்டில் நடந்த கருத்துக்கணிப்பில் சிறந்த தொகுப்பாளினி என்ற அந்தஸ்தை பெற்றவர் உமா.BBCல் 2001ல் நடந்த கரண் தபர்ஸின் Face to Face நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் தென்னிந்திய தொகுப்பாளினி என்ற பெருமையை பெற்றார்.

pepsi uma

இவர் உடைகள் பிரச்சனை காரணத்தால் பெப்சி விளம்பரத்தில் சச்சின் டெண்டுல்கருடன் நடிக்க மறுத்திருக்கிறார். அதோடு ரஜினி, மணிரத்னம், பாரதிராஜா என தமிழ் பட வாய்ப்புகளையும், சுபாஷ் காய் இயக்கத்தில் ஷாருக்கானுடன் நடிக்கும் பாலிவுட் வாய்ப்பையும் மறுத்துள்ளார்.

இவரின் பெப்ஸி உமா நிகழ்ச்சி பிடித்த சிலர் உமாவுக்கு கோயில் கட்டியுள்ளனர். ஆந்திராயில் உள்ள குமிளி என்ற இடத்தில் அக்கோயில் இடம்பெற்றிருப்பதாக கூறப்படுகிறது.

இவருடைய கணவர் சுகேஷ் அவர்களும் ஒரு மாடல், ஒரு விளம்பர நிகழ்ச்சியில் தான் இருவரும் சந்தித்துள்ளார்கள்.
Masters in Business Administration முடித்த இவர் தற்போது பிரபலமான ஒரு நிறுவனத்துக்கு இயக்குனராக இருக்கிறார்.

uma

மேலும், புகழோடு இருந்தபோது என்னைச் சுற்றி வந்த கூட்டம் நான் மீடியாத்துறையை விட்டு விலகிய உடன் என்னை விட்டு ஓடிப்போனது. இப்போது நான் மீண்டும் புகழ் வெளிச்சத்திற்கு வந்த உடன் என்னைத் தேடி வந்து ஓட்டுகிறது. நான் எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒரு புன்னகையோடு நிறுத்திக் கொள்கிறேன்.

அரசியல் ரீதியான தொந்தரவு, அழுத்தம் காரணமாகவே மீடியாவை உலகை விட்டு விலக நேரிட்டது. என்று தான் ஏன் மீடியா உலகை விட்டு விலகினேன் என்று பழைய பேட்டி ஒன்றில் வேதனை கலந்த சிரிப்புடன் விளக்கம் கொடுத்துள்ளார்.