முதல்முறையாக புகழ் வெளிச்சத்தில் அரவிந்த் சாமியின் மகன்... பக்கா என்னா ஸ்மார்ட் - Cinemapettai
Connect with us

Cinemapettai

முதல்முறையாக புகழ் வெளிச்சத்தில் அரவிந்த் சாமியின் மகன்… பக்கா என்னா ஸ்மார்ட்

aravind swamy

News | செய்திகள்

முதல்முறையாக புகழ் வெளிச்சத்தில் அரவிந்த் சாமியின் மகன்… பக்கா என்னா ஸ்மார்ட்

தமிழ் சினிமாவின் சாக்லெட் பாய் அரவிந்த் சாமியின் ஸ்மார்ட் மகனின் புகைப்படம் முதல் முறையாக வெளியிடப்பட்டு இருக்கிறது.

தளபதி படம் மூலம் கோலிவுட்டில் அறிமுகமானவர் அரவிந்த் சாமி. அதை தொடர்ந்து, மணிரத்னம் இயக்கத்தில் ரோஜா மற்றும் பாம்பே படங்களின் மூலம் தமிழ் ரசிகர்கள் மனதில் சிம்மாசனம் போட்டு அமர்ந்தார். கட்டுனா அரவிந்த் சாமி போல மாப்பிள்ளையை தான் கட்டுவேன் என 80களின் மணப்பெண்கள் அடம் பிடித்ததெல்லாம் அந்த காலத்து ஹிட் ஸ்டோரி. அதை தொடர்ந்து, பல படங்களில் நடித்தவர். சில காலம் தமிழ் சினிமாவை விட்டு விலகி இருந்தார். இதை தொடர்ந்து, மணிரத்னமே மீண்டும் செகண்ட் இன்னிங்ஸை தொடங்கி வைத்தார். ஆனால், அவருக்கு ட்ரேட் மார்க் ஹிட்டை கொடுத்தது மோகன் ராஜா இயக்கத்தில் வெளியான தனி ஒருவன் படம் தான். இதை தொடர்ந்து, தமிழ் சினிமாவின் ஆக்‌ஷன் நாயகனாக மாறி விட்டார். இந்த வாரம் அவர் நடிப்பில் வெளியான பாஸ்கர் ஒரு ராஸ்கல் திரைக்கு வந்திருக்கிறது.

இளம் பெண்களின் கனவு நாயகனாக இருந்த அரவிந்த் சாமி, காயத்ரி கிருஷ்ணமூர்த்தி என்பவரை 1994ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் ஆதிரா சாமி என்ற மகளும், ருத்ரா சாமி என்ற மகனும் இருக்கிறார்கள். திடீரென ஏற்பட்ட மன கசப்பால் இருவரும் 7 வருடமாக பிரிந்து இருந்தனர். 2010ம் ஆண்டு முறையாக நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து விவகாரத்து செய்து கொண்டனர். இதை தொடர்ந்து, பிள்ளைகளின் காவலை அரவிந்த் சாமி எடுத்து கொண்டார். இதையடுத்து, அபர்ணா முகர்ஜி என்ற வக்கீலை 2012ம் ஆண்டு மறுமணம் செய்து கொண்டுள்ளார்.

இந்நிலையில், அரவிந்த் சாமியின் இரண்டாவது மகன் ருத்ரா, தனது ஐபி ப்ரோகிராம் பட்டப்படிப்பை முடித்துக் கொண்டுள்ளார். இதுகுறித்து டுவிட்டரில் அரவிந்த் சாமி மகனை பாராட்டி ஒரு ட்வீட்டை தட்டி இருக்கிறார். அப்பதிவில், என் மகன் ஐபி ப்ரோகிராமில் பட்டப்படிப்பை முடித்திருப்பது எனக்கு பெருமையாக இருக்கிறது. மற்றவர்கள் போல நீயும் உன் மைல்கல்லை அடைய ஆசைப்படுகிறேன். உன்னுடைய வாழ்க்கை மகிழ்ச்சி, சமாதானம் மற்றும் அன்பு நிறைந்ததாக இருக்க வேண்டும். உன்னை சுற்றி இருக்கும் உலகிற்கு பயனுள்ளதாக இருக்க வேண்டுகிறேன். பெரியதாக கனவு காண், அது கண்டிப்பாக நடக்கும் என்பதை மறவாதே எனக் குறிப்பிட்டு இருக்கிறார். இந்த ட்வீட்டுடன் அவரின் மகன் புகைப்படத்தையும் வெளியிட்டு இருக்கிறார். இப்புகைப்படம் தான் சமூக வலைத்தளத்தில் தற்போதைய வைரல் ஹிட் என்பது குறிப்பிடத்தக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Advertisement

அதிகம் படித்தவை

To Top