இசையமைப்பாளர் டூ ஹீரோ அவதாரம் எடுத்துள்ள ஜி.வி.பிரகாஷூக்கு முக்கியமான கௌரவம் கிடைத்துள்ளது.G.V-Prakash-Kumar

இயக்குநர் வசந்தபாலனின் வெயில் படம் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் பயிற்சிபெற்ற ஜி.வி.பி., மெலடிகளுக்குப் பெயர் போனவர். சூப்பர் ஹிட் பாடல்கள் பலவற்றைக் கொடுத்த ஜி.வி.பிரகாஷ், நடிகர் அவதாரம் எடுத்தார். த்ரிஷா இல்லைனா நயன்தாரா, டார்லிங், நாச்சியார் என பல படங்களில் ஹீரோவாகவும் நடித்து, தனது திறமையை வெளிப்படுத்தினார். இப்போதும், இசையமைப்பாளர், நடிகர் என பிஸியாக இருக்கும் ஜி.பி.பிரகாஷ், சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு எதிராகவும் குரல் கொடுத்து வருகிறார். அறிமுக இயக்குநர் வள்ளிகாந்த் இயக்கிய செம படத்தின் ரிலீஸுக்காக அவர் வெயிட்டிங். செம படம் அடுத்த வாரத்தில் ரிலீஸாக இருக்கிறது.

இந்தநிலையில், நடிகர் ஜி.வி.பிரகாஷின் சமூக சேவைகளுக்காக அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த 2014-ம் ஆண்டு சென்னை வெள்ளத்தின் போது களத்தில் இறங்கி மீட்புப் பணிகளில் ஈடுபட்டதுடன், நிவாரணப் பொருட்களும் வழங்கினார். அதேபோல், ஜல்லிக்கட்டு போராட்டம் உள்ளிட்ட பல போராட்டங்களில் கலந்துகொண்டு வாய்ஸ் கொடுத்தார். அதேபோல், காவிரி போராட்டம், நெடுவாசல் போராட்டம், ஸ்டெர்லைட் எதிர்ப்புப் போராட்டம் மற்றும் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் தமிழ் இருக்கை அமைவதற்கான முயற்சிகள் என சமூகம் சார்ந்த பிரச்னைகள் அனைத்திலும் மக்களோடு கரம்கோர்ந்து நின்றார் ஜி.வி. பிரகாஷ்.

gv prakash
gv prakash

அவரது சமூகம் சார்ந்த அக்கறைக்கு மதிப்பளிக்கும் விதமாக செயிண்ட்.ஆண்ட்ரூஸ் சர்வதேச இறையியல் பல்கலைக்கழகம், அவருக்கு கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிக் கௌரவித்துள்ளது. இந்த தகவலை ஜி.வி.பிரகாஷின் மனைவியும், பாடகியுமான சைந்தவி சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார். இதையடுத்து பிரபலங்கள் முதல் ரசிகர்கள் வரை பல்வேறு தரப்பினரும் அவருக்கு வாழ்த்து மழை பொழிந்து வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here